எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஸ்கோ, ஜன.31 பாஜகவுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டோம்'' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

கோவா மாநிலம், வாஸ் கோவில் தனது கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் சரத்பவார் பங்கேற்றுப் பேசியதாவது:

பாஜகவுடன் தேசியவாத காங் கிரஸ் கட்சி நெருக்கம் காட்டுவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், அது உண்மையல்ல.

பாஜகவுக்கு தேசியவாத காங் கிரஸ் ஒருபோதும் ஆதரவு கொடுக் காது. மதச் சார்பின்மையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். எனவே, மதவாத சக்தி களுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

வெளிநாடுகளில் பதுக்கி வைக் கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பேன் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். எனினும், இதிலிருந்து பொதுமக்களை திசை திருப்பும் நோக்கிலேயே பணமதிப் பிழப்பு திட்டத்தை அறிவித்தார்.

இதனால், ஒட்டுமொத்த மக்க ளும் வங்கிகளின் முன்பு வரிசை களில் நிற்க வேண்டிய சூழல் ஏற் பட்டது. கோவாவின் முதல்வராக மனோகர் பாரிக்கர் கடந்த 2012-இல் பதவியேற்ற பின், சுரங்கத் தொழிற் சாலைகளை மூடினார். இதனால், ஏராளமான தொழிலாளர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டனர் என்றார் சரத்பவார்.

மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக வுடன் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், பாஜகவுக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கக் கூடும் என அரசியல் அரங்கில் பேச்சு நிலவி வருகிறது. இந்நிலையில், பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என பவார் கூறியுள்ளார்.

மோடி மீது தாக்கு: இதனைத் தொடர்ந்து, பனாஜியில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பவார் கூறியதாவது:

நாடாளுமன்றக் கட்டமைப்பில் கட்சிகளிடையே கருத்து வேறு பாடுகள் நிலவுவது சகஜம்தான். அதற்காக, பிற கட்சிகளை முழு வதுமாக முடக்க நினைப்பது சரியல்ல.
பிரதமர் மோடியின் உரைகளை கவனிக்கும்போது, காங்கிரஸ் கட்சியை அவர் அழிக்க நினைப்பது அப்பட் டமாகத் தெரிகிறது என்றார் பவார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner