எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.1 கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிவண்டியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு தன் கட்சியினருக்காக பிரச் சாரத்தில் ஈடுபட்டார். அப் போது அவர், ‘‘காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் கொலை செய்தனர்’’ என பேசினார். இந் தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர் வாகி ராஜேஷ் குண்டே என்பவர் பிவண்டி நீதிமன்றத்தில், ராகுல் காந்தி தங்கள் அமைப்புக்கு எதிராக அவதூறு பரப்புவதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி பிணை பெற்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந் தது. அப்போது நீதிமன்றத் தில் ராகுல்காந்தி ஆஜரானர். இதையடுத்து ராகுல் காந்தி தரப்பு வாதத்தைப் பதிவு செய் வதற்காக வழக்கு விசாரணை வரும் மார்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்துநீதி மன்ற வளாகத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,

“தன்னுடைய போராட்டம் மகாத்மா காந்திஜியை கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரானது. அதேபோல் காதி காலண்டரில் இருந்து காந்தியின் படத்தை நீக்கி, மோடியின் படத்தை இணைத்தற்கும் எதிரானது. இதற்காகத் தொடர்ந்து நான் போராடுவேன்” என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner