எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக விவசாயிகள் தற்கொலை விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்
திருச்சி சிவா எழுப்பிய புயல்!

புதுடில்லி, பிப்.1 நாடாளுமன்றத் தில் இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ் வாய்க்கிழமை உரையாற்றியதும், தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை மாநிலங்களவை திமுக உறுப் பி னர் திருச்சி சிவா திடீரென எழுப் பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற மய்ய மண்ட பத்தில் மக்களவை, மாநிலங்கள வை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது உரையை நிறைவு செய்யும் வரிகளை வாசித்தார். அப்போது திருச்சி சிவா தனது இருக்கையில் இருந்து திடீரென எழுந்து, “தமிழ் நாட்டில் 200-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் வறுமையை ஒழிக்கவும், அவர்களின் பாது காப்பை உறுதிப்படுத்தவும் மத்தி யில் ஆளும் அரசு என்ன செய் தது? உங்கள் உரையில் விவசாயிகளின் பாதுகாப்பு பற்றி குறிப் பிடாதது வருத்தம் அளிக்கிறது’ என்று குரல் எழுப்பினார்.

குடியரசுத் தலைவர் உரையை வாசிக்கும்போது மய்ய மண்ட பத்தில் அமைதி நிலவியது. இதனால் திருச்சி சிவா உரத்த குரலில் பதிவு செய்த கருத்து, மய்ய மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் கேட்டது. இதை யடுத்து அவரை நோக்கி சில நொடிகள் அனைத்து உறுப்பினர் களின் பார்வையும் திரும்பியது. இருப்பினும், அவரது கருத்துக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் இரு அவை கூட்டுக் கூட்டத்தில் அலுவல் தொடர்ந்தது.

இது குறித்து பின்னர் செய்தி யாளர்களிடம் திருச்சி சிவா கூறு கையில், “தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வரும் அவலம் நீடிக் கிறது. குடி யரசுத் தலைவரின் உரையை அவ மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. முந்தைய காலத்தில், இரு அவை கூட்டுக் கூட்டத்தில் இலங் கைத் தமிழர் பிரச்னைக்காக திமுக சார்பில் குரல் கொடுக்கப்பட்டுள் ளது.

வறட்சி மாநிலமாக தமி ழகம் அறிவிக்கப்பட்டிருப்பது, 200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, பட்டினி யால் வாடும் விவசாயிகளின் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காணாதது போன்றவை கவலை யை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்நிலையில், விவசாயி களின் நலன்களுக்காக “டெபிட் கார்டு’, “கிரெடிட் கார்டு’ கொடுத் துள்ளதாக குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடுகிறார். சோற் றுக்கே வழியின்றி வறுமையில் வாடும் விவசாயிக்கு இதனால் என்ன பலன் வரப்போகிறது?

எனவேதான், அதிருப்தி அடைந்து எனது கருத்துகளை மய்ய மண்டப கூட்டத்தில் பதிவு செய்தேன். மாநிலங்களவை கூட்டத்திலும் இப்பிரச்னையை தீவிர மாக எழுப்புவேன் என்றார் திருச்சி சிவா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner