எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு!

புதுடில்லி, பிப்.2 மத்திய இடைநிலைக் கல்வி ஆணையம் எனப்படும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு கட்டாயமாக்கப்படுகிறது.

பொதுவாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, சமச்சீர் கல்வி படிக்கும் மாணவர் களைப் போல பொதுத் தேர்வு நடத்தப்படுவதில்லை.

அதற்குப் பதிலாக பள்ளி அளவிலான தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு அதன் அடிப் படையில் 11-ஆம் வகுப்புக்கு தேர்ச்சியாகின்றனர். இந்நிலை யில், சமச்சீர் கல்வி பயிலும் மாணவர்களைப் போல சிபி எஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர் களுக்கும் பொதுத் தேர்வு நடத்த கடந்த டிசம்பர் மாதத்தில் சிபி எஸ்இ ஆணையம் முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து பொதுத் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், அடுத்த ஆண்டு முதல், அதாவது 10-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு எழு துவது கட்டாயமாக்கப்படு கிறது. அதற்காக அவர்கள் முழு பாடப் பகுதிகளையும் படிக்க வேண் டும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைய, உள் மதிப்பீடு (இன் டர்னல்) மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டிலும் 33 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

புதிய நடைமுறையின்படி, எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப் பெண்களும், உள் மதிப்பீட்டுக்கு 20 மதிப்பெண்களும் அளிக்கப் படும்.

எழுத்துத் தேர்வுக்கு மாண வர்கள் முழு பாடத்திட்டத்தையும் படித்து எழுத வேண்டும். உள்மதிப்பீட்டை பொருத்த மட் டில், ஒவ்வொரு பாடத்திலும் 3 கால இடைவெளியில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவற் றில் இரு தேர்வுகளில் சிறப்பாக பெற்ற மதிப்பெண்களின் சரா சரியை எடுத்துக் கொள்ள வேண் டும்.

இந்தத் தேர்வுகளைத் தவிர்த்து, நோட்டுப் புத்தகம் சமர்ப் பித்தல், படித்தல், கவனித்தல், பள்ளி ஆய்வகச் செயல் பாடுகள், செய்முறை மற்றும் ப்ரா ஜெட்டுகள் ஆகியவற்றுக்கு சேர்த்து 5 மதிப் பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner