எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை
தொடர்ந்து நடத்த  மத்திய அரசு உத்தரவிட வேண்டும்!
மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்!

புதுடில்லி, பிப்.3- கீழடியில் தமிழர்களின் சங்ககால வாழ்க் கையை வெளிப்படுத்தும் அகழ் வாராய்ச்சிப் பணிகளை உட னடியாக மீண்டும் தொடங்க மத்திய அரசு உத்தரவிடுவதுடன் அதற்கு தேவையான நிதி யையும் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற மாநி லங்களவையில், தி.மு.கழக உறுப்பினர் திருச்சி சிவா நேற்று (2.2.2017) வலியுறுத் தினார்.

நாடாளுமன்ற மாநிலங் களவையில் தி.மு.கழக உறுப் பினர் திருச்சி சிவா மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சினை குறித்து சிறப்பு குறிப் பின் கீழ் பேசியபோது குறிப் பிட்டதாவது:-

கீழடி என்பது தமிழ் நாட் டில் உள்ள ஒரு சிறிய ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர் ஆகும். இங்கு இந்திய தொல்பொருள் ஆய் வுத் துறை மூலம் அகழ்வா ராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப் பட்டது.

அதன் மூலம் 2500 ஆண்டு களுக்கு முந்திய தமிழ்நாட்டின் சங்க காலத்தில் இருந்த சிறப்பு மிக்க புராதனச்சிறப்புகள் வெளிப்படுத்தப்பட்டன.

2016ஆம் ஆண்டு கீழடியில் நடத்தப்பட்ட இந்த அகழ் வாராய்ச்சிகள் மூலம் கிணறு கள், செங்கல் சுவர்கள், மண் பாண்டங்கள், ஆபரணங்கள், எலும்பாலான பொருட்கள், இரும்பு ஈட்டிகள், தமிழ் எழுத்துக்களுடன் கூடிய மண் ஓடுகள் ஆகியவை பெருமள வில் கண்டுபிடிக்கப்பட்டு, இங்கு ஒரு பழங்கால குடியிருப்பு இருந்ததும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த மாநிலத்தின் புராதன வரலாற்றை நாடு முழுவதும் தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருந்த நேரத்தில்  எதிர் பாராத வகையில் அகழ்வா ராய்ச்சிப் பணிகள் நிறுத்தப் பட்டன.

போதுமான நிதி இல்லை என்ற காரணத்தைக் கூறி இந்த முடிவு மத்திய அரசால் எடுக் கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும், வேதனையை யும் அளித்துள்ளதோடு, பெரு மளவில் ஆத்திர மூட்டும் உணர்வையும் ஏற்படுத்தி யுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 29 (1), இந்தி யாவில் வசிக்கும் ஒவ்வொரு குடி மகனுக் கும் தனக்கென்று தனியான ஒரு பண்பாட்டை வைத்துக் கொள்வதும், அதைப் பாதுகாப்பதும் அடிப்படை உரிமை என்று கூறுகிறது.

அரசியலமைப்புச் சட்டத் தின் பிரிவு 51ஏ (1) ஒவ்வொரு குடி மகனுக்கும் நம்முடைய பல பண்பாடுகள் கலந்துள்ள கலாச்சாரத்தை மதிப்பதும் அதை பேணிப் பாதுகாப்பதும் கடமையாகும் என்று கூறு கிறது.

எனவே, இந்த அகழ்வாராய்ச் சிக் கண்டு பிடிப்புகளின் கலாச்சார, சரித்திர மற்றும் அரசியலமைப்புச் சட்ட முக் கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, இந்திய தொல்பொருள் ஆய் வுத் துறைக்கு அந்த அகழ் வாராய்ச்சி தொடர்ந்து மீண்டும் நடத் துவதற்கு உடனடியாக உத்தர விடுவதற்கான நட வடிக்கைகளை எடுக்க வேண் டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன். அத்துடன் அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது தமிழ்நாட்டின் பெரு மைக்குரிய, கலாச்சார மற்றும் வரலாற்றை மேலும் வெளிப் படுத்தும் அதன் மூலம் நாட்டு மக்கள் தமிழர்களின் நாக ரிகம் மற்றும் பண் பாட்டைப் பற்றி அறிந்து கொள்ள நாட்டு மக்கள் கொண்டுள்ள தாகத்தையும் தணிக்கும்.

இவ்வாறு மாநிலங்களவைக் தி.மு.கழக உறுப்பினர் திருச்சி சிவா சிறப்புக் குறிப்பின் கீழ் உரை யாற்றினார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner