எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, பிப் 6 காங்கிரஸ் கட்சி சார்பில் கம்பன் கலை யரங்கத்தில் பணமதிப்பிழப்பு சட்டமும், மக்கள்படும் வேத னையும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு காங் கிரஸ் தலைவரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங் கினார்.

கருத்தரங்கில் முதல் அமைச்சர் நாராயணசாமி பேசி யதாவது: நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.,500 நோட் டுகள் செல்லாது என்று அறிவிக் கப்பட்டதால் புதுச்சேரியில் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக் கப்பட்டுள்ளனர்.

புதுவைக்கு வேலைசெய்ய வந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். பல குடும்பங்களில் திருமணத் துக்காக சேர்த்து வைத்து இருந்த பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாமல் தவித்தனர்.

பொருளாதார சீர்குலைவு

ரூபாய் நோட்டுகள் செல் லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு அதுகுறித்து 135 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள் ளன. இதனால் மக்கள் குழப் பம் அடைந்துள்ளனர். இந்தி யாவில் ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி பணம் செல் லாது என்று அறிவிக்கப்பட்டது. அதில் ரூ.14.90 கோடி வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. சுமார் ரூ.50 கோடிவரை இன்னும் வரவில்லை என்று கூறப் படுகிறது.

ஆனால் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினை வெளியிடும் முன்பு ரூ.4 லட் சம் கோடி வரை கருப்பு பணம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தவறாக கூறி மக்களை அவதிக்குள்ளாக்கினார். இத னால் நாட்டின் பொருளாதாரத் தையே மத்திய அரசு சீர் குலைத்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் பல தொழிற்சாலைகள் மூடப்பட் டன. வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது.

ரொக்கமில்லா பரிவர்த் தனை என்பது நமது நாட்டிற்கு பொருத்தமில்லாதது. நாட்டில் 70 சதவீத மக்கள் கிராமப் புறத்தில் வசிக்கின்றனர். பல ருக்கு இன்னும் வங்கிக்கணக்கே இல்லை. அப்படியிருக்க எவ் வாறு பண அட்டை மூலம் பரி வர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த திட்டத்தை புதுச்சேரியிலும் அமல்படுத்த பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியது. ஆனால் அதை மக்கள் ஏற்கும் வரை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். அதை பிரதமரை சந்தித்தபோது நேரிலும் எடுத் துரைத்தேன்.

மேலும் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை அமல் படுத்த அமைக்கப்பட்ட குழு வின் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தேன். நாட் டிலேயே முதன்மை மாநிலம் என்று கூறப்படும் குஜராத்தில் இந்த திட்டத்தை அமல்படுத் துங்கள் என்றும் கூறினேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner