எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, பிப். 6- மூலப்பொருட் கள் விலை உயர்வால், குஜ ராத், மகாராஷ்டிரா மாநிலங் களில் உள்ள காகித ஆலைக ளுக்கு, கடும் நெருக்கடி ஏற் பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், காகித ஆலை கள் அதிகளவில் உள்ளன. கடந்த இரு மாதங்களாக, காகித உற்பத்திக்குத் தேவை யான மூலப்பொருட்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், காகித ஆலைக ளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள் ளது.

இது குறித்து, குஜராத் காகித ஆலை கூட்டமைப்பின் தலைவர் சுனில் அகர்வால் கூறியதாவது:இந்தியா, சீனா ஆகியவை, மறுசுழற்சிக்கு, வெளிநாடுகளில் இருந்து உபயோகித்த காகிதங்களை, அதிகளவில் இறக்குமதி செய் கின்றன. இதற்காக, இரு நாடு களும், மற்ற நாடுகளைத்தான் சார்ந்துள்ளன. தற்போது, காகித உற்பத்திக்குத் தேவை யான மூலப்பொருட்களின் விலை, 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், காகித ஆலைகளுக்கு, ஒரு கிலோவுக்கு, ஆறு ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற் பட்டுள்ளது.

குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள காகித ஆலைகளின் ஆண்டு விற்று முதல், 12 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. தற்போது, மூலப்பொருட்க ளின் விலை உயர்வால், இரு மாநிலங்களிலும் உள்ள, 125 காகித ஆலைகளுக்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது. சில ஆலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner