எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சத்தீஸ்கர், பிப்.7 சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள கைதிகள் பல்வேறு உடல்நலக் குறைபாட்டால் அவதிப் படுவது குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்தன.

குறிப்பாக கைதிகள் அலர்ஜி, தோல் வியாதியால் பாதிக்கப்படுவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, சிறைகளில் கைதிகள் பயன்படுத்தும் போர்வைகள் மிகவும் அழுக்கடைந்தும், துர்நாற்றத்துடனும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து எல்லா சிறைகளிலும் இருக்கும் போர்வைகளை முதல்முறையாக துவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக போர்வைகள் 5 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அவ்வப்போது துர் நாற்றம் போக வெயிலில் காய வைக்கப்படுவது வழக்கம்.

இதுகுறித்து சிறைத் துறை டைரக்டர் ஜெனரல் கிரிதாரி நாயக் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘போர்வை களை துவைக்க ரூ.40 லட்சத்தில் இயந்திரங்கள் வாங்க அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் இயந்திரங்களில் போர்வைகளை துவைக்கும் பணி தொடங்கும். தினமும் குறைந்த பட்சம் 500 போர்வைகளை துவைக்க முடியும். அதன்படி எல்லா போர்வைகளையும் துவைக்கும் பணி மூன்று நான்கு மாதங்களில் முடிந்துவிடும். கைதிகளின் உடல்நலம், மனநலம் இரண்டையும் மேம்படுத்தி அவர் களை நல்ல குடிமகன்களாக உருவாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்’’ என்றார்.

மற்றொரு சிறை அதிகாரி கூறும்போது, ‘‘சமீபத்தில் எல்லா சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளை மருத்துவ பரி சோதனை செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தோல் வியாதியால் பாதிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதற்கு போர்வைகள்தான் காரணம் என்று தெரிய வந்தது. பூஞ்சை பிடிக்காமல் இருக்க அவ்வப் போது வெயிலில் மட்டும் காய வைத்துள்ளனர். போர்வைகளை துவைப்பதே இல்லை என்று தெரிய வந்தது’’ என்றார்.

சத்தீஸ்கரில் 5 மத்திய சிறைகள், 12 மாவட்ட சிறைகள், 16 கிளைச் சிறைகள் உள்ளன. இவற்றில் உள்ள போர்வைகள் கைதிகளுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கப்படு கின்றன. ஒருவர் பயன் படுத்தியதையே மற்றவர்களும் பயன்படுத்த வழங்கி வருவதால் தோல் வியாதி பரவி யுள்ளது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner