எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, பிப்.8 பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை ஒருங்கிணைத்த தன் மூலம், ரயில்வே துறையின் தன்னாட்சியை மத்திய அரசு சிதைத்து விட்டது என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டினார்.

ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்

ஜேட்லி தாக்கல் செய்த மறுநாள், பீகார் மாநிலத்துக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக 16.56 சதவீத நிதி கிடைத்துள்ளது என்று கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்தது.

இதுதொடர்பாக, பாட்னாவில் செய்தியாளர்களிடம் நிதீஷ்குமார், திங் கள்கிழமை கூறியதாவது:

ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்பதையும், பீகார் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கில், எவ்வளவு பணிகள் முடிக் கப்பட்டுள்ளன என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

வரும் 2017-18-ஆம் நிதியாண்டில் பீகார் மாநிலத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது எந்த விதத்தில் பலனளிக்கும் என்பது தெரியவில்லை.

பீகார் மாநிலத்தின் பாகல்பூரில் புதிய ரயில்வே கோட்டம் உருவாக்குவதற்கான அறிவிப்பு என்ன ஆனது? நான், ரயில்வே அமைச்சராக இருந்தபோதே ஒப்புதல் அளிக்கப்பட்ட, தானாபூர்-கியூல் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் என்ன ஆனது? என்பதை மத்திய அரசு விளக்க வேண் டும்.

ரயில்களில் தூய்மை எந்த நிலையில் உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.

ரயில்களில் மூன்றடுக்கு பொதுப் பெட்டிகளை விட, முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் தூய்மையின்றி காணப் படுகின்றன.

ரயில்களில் தூய்மை, காலந்தவறாமை ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல், கட்செவி அஞ்சல் மூலமாக தக வல் கொடுத்தால் பால் அல்லது உணவுப் பொருள்கள் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பயோ-கழிப்பறைகள், நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோதே, தெற்கு ரயில்வேயில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்று நிதீஷ் குமார் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner