எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, பிப்.10 உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 73 தொகுதிகளில் நாளை  (11.2.2017)  ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு பிரசாரம் ஓய்ந்தது.

நாட்டின் மிகப்பெரிய மாநி லமான உத்தரபிரதேச சட்ட சபையில் 403 இடங்கள் உள்ளன. அங்கு நாளை முதல் (11-.2.2017) அடுத்த மாதம் 8-ஆம் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ் வாடி கட்சி அரசை வீழ்த்தி விட்டு, ஆட் சியை கைப்பற்றியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு பாரதீய ஜனதா களம் இறங்கி இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியும் மல்லுக்கட்டுகிறது. இவர்களுக்கு மத்தியில் ஆளும் சமாஜ்வாடி கட்சி-காங்கிரஸ் கட்சி கூட்டணியும் போராடி வருகிறது.

முதல் கட்டமாக 15 மாவட் டங்களில் உள்ள 73 தொகுதி களில் நாளை  தேர்தல் நடக் கிறது. இந்த தொகுதிகள் இன ரீதியில் பதற்றமானவை. 2 கோடியே 59 லட்சம் வாக் காளர்கள் தங்களுடைய ஜனநாய கக்கடமையை நிறைவேற்ற இருக்கிறார்கள். இவர் கள் 836 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தல், எந்தக் கட்சி ஆட் சியைக் கைப்பற்றப்போகிறது என்பதற்கு அச்சாரமாக அமை யும். எனவே இது பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி ஆகிய மூன்று தரப்புக்கும் அமில பரிசோதனையாக அமைந் துள்ளது.

ராஷ்ட்ரீய லோக்தள தலை வர் அஜித் சிங்கும் 59 தொகுதி களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner