எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, பிப்.11-  ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலையொட்டி, புலந்த் ஷாரை அடுத்த சிகந்தராபாத் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தேர்தல் பரப்புரையின்போது கூறியதாவது: “நான் ஒரு சுதந்திரமான அரசியல்வாதி ஆவேன்.  வெறுப்புணர்ச்சி விஷத்தை பரப்பக் கூடிய அமைப்புகளாக, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு களை வேரோடு முழுவதுமாக அகற் றுவதற்கு எங்கும் செல்வேன். வகுப்புவாத சக்திகளாக உள்ள பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-. அமைப்பு களை எந்த இடமாக இருந்தாலும் தோற்கடிப்பேன். பாஜகவை வீழ்த்தி பீகாரில் நிதிஷ்குமார் வெற்றி நடை போட்டார். அதே நிலைதான் உத்தரப் பிரதேசத்திலும் ஏற்படும். உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக 3ஆம் இடத்துக்கு தள்ளப்படும். உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட பாஜக வால் முன்னிறுத்த முடியவில்லை.

உலக அளவில் அய்ந்தாம் இடத் தில் பெரிய நாடான நம் நாட்டில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக மக்கள் உள்ளனர். ஆனாலும், முதல்வருக்கு தகுதியான வேட்பாளரை பாஜகவால் கண்டுபிடிக்க முடியவில்லை. பீகாரில் பரப்புரை அதிக அளவில் செய்த மோடி, உத்தரப்பிரதேசத்தில் அந்த அளவில் செய்யவில்லை.  243 தொகுதிகள் மட்டுமே கொண்ட பீகாரில் மூலை முடுக்குகளில் எல்லாம் பரப்புரை செய்த பிரதமர் மோடி, 403 தொகுதி களைக் கொண்டுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் குறைந்த தொகுதிகள் எண்ணிக்கையிலேயே பரப்புரை களை செய்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தோல்வி பெறுவதற்கான பழியை ஏற்க அவர் விரும்பவில்லை என்பதையே இது உணர்த்துகிறது’’

இவ்வாறு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner