எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

விளையாட்டுப் போட்டியிலும் ஒதுக்கல்! ராஜ்கோட், பிப்.13 குஜராத்தில் உள்ள 4 பல் லைக்கழகங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் கடுமையான ஜாதிவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று  மத்திய மனிதவளத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. விளையாட்டுப் போட்டி யிலும் ஒதுக்கப்படும் விபரீதம் தலைதூக்கி நிற்கிறது.

இறந்தபசுமாட்டுத்தோலைஉரித்ததாழ்த் தப்பட்ட இளைஞர்களை சாலையில் இழுத்துச் சென்று அடித்துத் துன்புறுத்திய நிகழ்வைக் கண்டு உலகமே அதிர்ந்தது! இந்த நிலையில் மத்திய மனிதவளத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குஜராத் பல்கலைக்கழகங்களில் அதிக அளவு ஜாதிய வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று கூறியுள்ளது.

குஜராத் பல்கலைக்கழகங்கள் உயர்ஜாதியி னரின் கூடாரமாகத் திகழ்கின்றன. இங்குள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் முதல் மாணவர்கள்வரைஜாதிரீதியாகவும்,மத ரீதியாகவும் மாணவர்களை நடத்தி வரு கின்றனர்.கடந்த20ஆண்டுகளாகவிரல் விட்டுஎண்ணும்இஸ்லாமியமாணவர்கள் பட்டதாரியாகியுள்ளனர். அங்கு இதர பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் பல்கலைக்கழங்களில் நுழைவது மிகவும் சிரமம். அப்படியே நுழைந்தாலும் அவர்கள்இறுதிவரைகல்விகற்றுவெளி யேறுவது நெருப்பாற்றில் நீந்தி வருவ தற்குச் சமமான ஒன்றாகும்.

மன ரீதியாகவும்,

உடல் ரீதியாகவும்!

குஜராத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங் களில் 2015--- -2016 ஆம் கல்வியாண்டில் மிகவும் அதிகமாக 46 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 32 புகார்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும்இதர பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடி மாணவர்களை துன்புறுத்திய தாகவும், 14 புகார்கள் மன ரீதியாக அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் மனித வளத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

குஜராத் பல்கலைக் கழகத்திலிருந்து 18 புகார்களும், ராஜ்கோட் சவுராஷ்டிரா பல்கலைக் கழகத்தில் 12 புகார்களும், ஜாம் நகர் பல்கலைக்கழகத்தில் 4 புகார்களும் மற்றும் குஜராத் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து 8 புகார்களும் மத்திய மனித வளத்துறைக்கு அனுப்பப் பட்டுள்ளன.

பெரும்பாலான புகார்கள் மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பட்டு, அதற்கான தீர்வுகள் மாநில அரசால் கிடைக்கப் பெறவேண்டும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக குஜராத் மாநில கல்வி அமைச்சகம் பல்கலைகழகங்களில் நடைபெறும் ஜாதிய கொடுமைகளைக் கண்டும் காணாமலும் தங்களிடம் வரும்புகார்கள் குறித்து எந்த ஒரு நட வடிக்கையும் எடுக்காத காரணத்தால் இந்தப் புகார்கள் மத்திய மனிதவளதுறை அமைச்சகம்வரை சென்றுள்ளது.

அமைச்சருக்குத்

தெரியாதாம்!

இதுகுறித்து குஜராத் மாநில கல்வித்துறை அமைச்சர் பூப்பேந்திரஷாவிடம் ஆங்கில ஊடகம் ஒன்று கேட்ட போது, மனித வளத்துறை அமைச்சரகத்திற்குச் சென்ற புகார்கள் குறித்து எனக்கு ஒன்றும் தெரி யாது, நான் வேலையில் மூழ்கியிருந்த காரணத்தால் இதைக் கவனிக்கவில்லை, இருப்பினும் நீங்கள் எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளீர்கள். கல்வித்துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து இப்புகார்கள்மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று உங்களுக்கு விவர மாகக் கூறுகிறேன் என்றார்.

கைப்பிடி சோற்றில் மலையை மறைக்கலாமா?

இதுகுறித்து குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.என்.பாட்டில் கூறிய தாவது:

‘‘மனிதவளத்துறையின் இந்தப் பட் டியலை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட,பழங் குடியின மாணவர்களுக்கு எதிராக ஜாதி வெறித் தாக்குதல் நடந்தது தொடர்பாக ஒரு புகார் கூட வரவில்லை. அப்படி ஒன்றும் இங்கே நடக்கவில்லை. இது மாநில மனித உரிமை அமைப்பினரால் அனுப்பப்பட்ட பட்டியலாகும். இதில் அரசியல் தலையீடு உள்ளது. இந்தப் புகார் குறித்து விசாரணைக்கு வரும்போது நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்‘’ என்றார்.

விளையாட்டிலும் வினை....

2014 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங் களுக்கு இடையே நடந்த விளை யாட்டுப் போட்டியில்  ராஜ்கோட் பல் கலைக்கழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட விளையாட்டு வீரர் குழுவில் தலித் வீரர்களை மட்டும் சேர்க்கவில்லை. பல திறமையான வீரர்கள் இருந்தும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் விளை யாட மாட்டோம் என்று உயர்ஜாதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இக்குழுவில்சேர்க்கவில்லைஎன்ற உண்மை வெளிவந்தது. இதுகுறித்து விசாரணை நடந்தபோது தலித் மாணவர்களது உடல் நிலை சரி யில்லை என்று மருத்துவ சான்றிதழ் ஒன்றை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அந்த சான்றிதழில் மாணவர்களை மிரட்டி கையொப்பம் பெற்ற விவகாரம்  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஆணையத்தின் விசாரணையில் தெரிய வந்தது. அப்போதே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பல்கலைக்கழக நிர்வாகத்தை கடுமையாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner