எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப். 13- கடந்த 3 மாதங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயண விவரங்களை அளிக்கும்படி, மத்திய அமைச் சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறிய தாவது:

டில்லியில் அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட் டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 3 மாதங் களில், மத்திய அமைச்சர்கள் நாட்டின் பிற பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தனரா? என்றும், அவ்வாறு சுற்றுப் பயணம் செய்திருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

ஒருவேளை சுற்றுப்பய ணம் எதுவும் செய்யவில்லை எனில், தாங்கள் எங்கும் செல்லவில்லை, தில்லியில் அலுவலகத்தில் இருந்தோம் என்று பதிலளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டு களை மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் வாபஸ் பெற்றது. இதேபோல், நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சர்கள் தங்க ளது தொகுதி தவிர்த்து, பிற பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கின்றனரா? என்பதை அறிய பிரதமர் விரும்புகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, மத்திய அரசின் திட் டங்களை, குறிப்பாக உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் மத்திய அர சின் முடிவு குறித்து மக்களி டம் அமைச்சர்கள் எடுத்து ரைத்தனரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள பிரதமர் மோடி விரும்புகிறார்.

அதற்காகவே, மத்திய அமைச்சர்களிடம் கடந்த 3 மாதங்களில் செய்த சுற்றுப் பயண விவரங்களை பிரதமர் மோடி கேட்டுள்ளார் என்று மத்திய அரசு வட்டாரத் தக வல்கள் தெரிவித்தன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner