எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோராடூன், பிப்.13 உத்தர காண்ட் மாநில சட்டசபை தேர்தல் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனால், அனைத்து கட்சித் தலைவர் களும் உத்தரகாண்ட் மாநி லத்தை முற்றுகையிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள னர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஹரித்துவாரில் பேரணி மேற்கொண்டார். அப் போது கூடியிருந்த மக்களிடம் அவர் பேசியதாவது:-

ஊழலைப் பற்றி பேசுவ தற்கு மோடிக்கு எந்தத் தகுதி யும் இல்லை. ஏனென்றால், முந்தைய ஆட்சியில் யாரெல் லாம் ஊழல் செய்தார்கள் என பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டி னரோ, அவர்கள் எல்லோரும் தற்போது பா.ஜ.க.விலேயே அய்க்கியமாகியுள்ளனர். ஊழல் வாதிகளுக்குதான் பா.ஜ.க. தேர் தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஊழலை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என உத்தரகாண்ட் முதல் அமைச் சரிடம் நான் உறுதியாக கூறியுள்ளேன். உத்தரகாண்ட் மாநில காங்கிரசில் இருந்து யாரெல்லாம் தூக்கி எறியப்பட் டனரோ, அவர்களை எல்லாம் மோடி அரவணைத்துக் கொண்டுள் ளார். இவ்வாறு பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner