எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்தராபாத், பிப். 14- நாட்டுக்கு அதிக நீதிமன்றங்கள் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் கருத்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அய்தரா பாத்தில் கருத்தரங்கில் அவர் ஞாயிற்றுக்கிழமை பேசியதா வது: புதிதாக நீதிமன்றத்தை நான் திறந்து வைத்தேன். அந் நேரத்தில் நான், இது

மகிழ் வான நிகழ்வா என்பது குறித்து தெரியாது என்று தெரிவித் தேன்.

நாட்டில் அதிக நீதிமன்றங் களும், மருத்துவமனைகளும் இருப்பது, அந்த சமூகத்தில் ஏதோ தவறு இருக்கிறது என் பதையே வெளிப்படுத்துகிறது. இது எனது தனிப்பட்ட கருத் தாகும். இது தெளிவான ஒன்றா கும். இதை புரிந்து கொள்வ தற்கு, நாம் மிகப்பெரிய புத் திசாலியாக இருக்க வேண்டும் என்பதல்ல.

நமக்கு எதற்கு நீதிமன் றங்கள் தேவைப்படுகின்றன? பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குதான் நீதிமன்றங் கள் தேவைப்படுகின்றன.

அந்த கணத்தில், சமூகத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை நீங்களே சொல்வீர் கள். இதே கருத்து, மருத்துவ மனைக்கும் பொருந்தும்.

போர்கள், புயல்கள் குறித்து படிக்கும்போது மிகவும் ஆர்வ மாக இருக்கும். ஆனால், அவற் றை எதிர் கொள்ள வேண்டும் எனில், மிகப்பெரிய அளவுக்குத் துணிச்சல் நமக்கு வேண்டும் என்றார் செலமேஸ்வர்.

நிகழ்ச்சியில் வழக்குரை ஞர்கள் செயல்பாடு, நேர்மை யின் முக்கியத்துவம் ஆகியவை குறித்தும் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அய்தரா பாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner