எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, பிப்.16 உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி பாபர் மசூதி விவ காரத்தில் சிறுபான்மையினர் நலன் பாதிக்கப்படுவதை கடந்த 1990-ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த சமாஜ வாதி அரசு அனுமதிக்கவில்லை என்று முன்னாள் முதல்வரும், அக் கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவகர்கள் கடந்த 1990-ஆம் ஆண்டு இடிக்க முயற்சித்தபோது, உத்தரப் பிர தேசத்தின் முதல்வராக சமாஜவாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் இருந்தார்.

அப்போது கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அவரது தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில், கரசேவ கர்கள் 16 பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவம் குறித்து, லக்னோ வில் புதன்கிழமை நடைபெற்ற சமாஜ வாதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முலாயம் சிங் பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:

அயோத்தியில் நடந்த சம்பவத்தால் மக்கள் கோபமடைந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்படுவதை தடுப்பதற்கு அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாகிவிட்டது.
சிறுபான்மையினர் மற்றும் அவர்களது நலன்கள் பாதிக்கப்படு வதை நாங்கள் அனுமதிக்கவில்லை என்றார் முலாயம் சிங்.

கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதன் காரணத் தினால், முலாயம் சிங்கை பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் “முல்லா முலாயம்‘ என்று விமர்சித்து வருகின்றனர்.கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது குறித்து முலாயம் சிங் முன்பு கருத்து தெரிவித்தபோது, அதை நினைத்து வேதனைப்படுவதாக குறிப் பிட்டிருந்தார்.

மேலும் அவர், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுவதை தவிர, வேறு எந்த உபாயமும் அப்போது தம்மிடம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner