எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.17 தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்படும் முறையிலிருந்து தமிழகத்திற்குவிலக்குஅளிக்க வகைசெய்து,மாநிலசட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், மருத்துவப்பட்ட மேல் படிப் புகளில் சேர்வதற்கு தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முறையை 2016- -17 கல்வி யாண்டு முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. எனி னும், நிகழ் கல்வியாண்டில் மட்டும் அத்தேர்வு முறையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.

இந்நிலையில், “நீட்’ தேர்வு முறையில் இருந்து தமி ழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் “தமிழ்நாடு எம்பிபிஎஸ், பல் மருத்துவப் படிப்புகள் சேர்க்கை சட்ட மசோதா, தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகள் சட்ட மசோதா’' ஆகியவை குரல்வாக்கெடுப்புமூலம்தமி ழக சட்டப்பேரவையில் கடந்த ஒன்றாம் தேதி ஒருமனதாக நிறைவேறின.

இந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரும் கோப்புகளை மத்திய அரசு மூலம் குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பி வைத் துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா டில்லியில் புதன்கிழமை மத்திய மனித வள மேம் பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரையும், வியாழக்கிழமை மத்திய சுகா தாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவையும் அவர்களது அலுவலகங்களில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புகள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு ஆதர வளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்பிரதமருக்குக்கடி தம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச் சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோரிடம் இதுகுறித்து விளக்கினேன்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட “நீட்’ விலக் கல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க ஆதரவு தருமாறு இரு அமைச்சர்களையும் கேட்டுக் கொண்டேன் என்றார் திருச்சி சிவா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner