எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பூர்வாஞ்

சல், பிப்.28 உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தை 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள கோரக்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி யமைக்கும்பட்சத்தில், மாநி லத்தை 4 சிறிய மாநிலங்களாக பிரிக்க நடவடிக்கை எடுப்போம். அந்த 4 மாநிலங்களில், பூர்வாஞ்சலும் அடங்கும்.

பின்தங்கியபகுதி,தனி மாநிலமாக உருவாக்கப்படு கின்ற வரையிலும் முன்னேற் றம் அடைய வாய்ப்பில்லை. இதைக் கருத்தில் கொண்டு, பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்ததும்நடவடிக்கைஎடுக் கப்படும். இந்தத் தேர்தல் மூலம், பூர்வாஞ்சல் மாநி லத்தை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ், பாஜக, சமாஜவாதி கட்சிகளை இப்பகுதி மக்கள் தண்டிக்க வேண்டும் என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தலைமையிலான அரசு முன்பு ஆட்சியிலிருந்தபோது, அந்த மாநிலத்தை 4 மாநிலங் களாக பிரிப்பது தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந் தது. இதை பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் ஆதரித்தன; சமாஜ் வாதி எதிர்த்தது.

எனினும்,2012-ஆம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன்சமாஜ்கட்சிதோல் வியடைந்தது.எனவே, இந்தத்தேர்தலில்எந்தஅர சியல்கட்சியின் தேர்தல் அறிக் கையிலும் உத்தரப் பிரதேசத்தை பிரிப்பது தொடர்பாக எவ் வித வாக்குறுதிகளும் அளிக் கப்படவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner