எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தேவ்ரியா, பிப்.28 மத்தியில் ஆட்சிபுரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது என்பதால் அவர் தனது வாக்குறுதிப்படி புல்லட் ரயில் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் ஏழு கட் டங்களாக நடைபெற்று வரு கிறது. 5 கட்டத் தேர்தல் முடி வடைந்த நிலையில், 6-ஆவது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதையொட்டி, மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் தேவ்ரியா நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சித் தலை வரும், முதல்வருமான அகிலேஷ் பேசியதாவது:

நரேந்திர மோடி மூன்று முறை குஜராத் முதல்வராகப் பதவி வகித்தார். ஆனால் அவ ரால் அங்கு ஒரு மெட்ரோ ரயிலைக் கூட கொண்டுவர இயலவில்லை. நாங்கள் உத்தரப் பிரதேசத்தில் மூன்று இடங்களில் மெட்ரோ ரயிலை இயக்குவ தற்கான பணிகளைத் தொடங்கி யுள்ளோம். ஆனால் மோடி கொண்டு வருவதாகச் சொன்ன புல்லட் ரயில் எங்கே?

அவர் மத்தியில் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகவுள்ள நிலையில், அந்த ரயில் எங்கே போனது? மோடிக்கு மத்தியில் ஆட்சிபுரிய மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. எனவே, அவர் தனது வாக்குறுதிப்படி புல்லட் ரயில் திட்டத்தை விரை வாக நிறைவேற்ற வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் நடை பெறும் தேர்வுகளின்போது மாண வர்கள் கூட்டம் கூட்டமாக புத் தகங்களைப் பார்த்து, காப்பி யடித்து எழுதுவதாக மோடி தனது பிரசாரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் அவ்வாறு நடந்திருக்கலாம். ஆனால், இந்த நேரத்தில் (எங்கள் ஆட்சியில்) தேர்வுகள் அப்படி நடக்கின் றனவா என்ன? பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட வினாத் தாள்களை கசிய விட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே ரகசிய உடன் பாடு உள்ளது என்றார் அகிலேஷ்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner