எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இம்பால், மார்ச் 1- மணிப்பூர் மாநில சட்டசபைக்கான தேர் தல் இரு கட்டங்களாக நடை பெற உள்ளது. மார்ச் 3-ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடக்க இருக்கும் பகுதியில் கடந்த 25-ம் தேதி நடந்த பிரச் சாரக் கூட்டத்தில் பேசிய பிரத மர் மோடி மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி ஊழலில் திளைத்துள்ளதாக குற்றம் சாட் டியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மணிப்பூர் மாநிலத் தின் ஹப்டா நகரில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரத மர் மோடியையும், மத்திய அர சையும் கடுமையாக விமர்சித் தார். இந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர் தலின் போது நல்ல நாட்கள் வருவதாக மோடி கூறினார். ஆனால், நல்ல நாட்கள் எங்கே? மணிப்பூர் மாநில மக்கள் தனித் துவமான அடையாளங்களை யும், அறிவையும் கொண்டுள்ள னர் என காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். இங்கே மதவாத சக் திகளின் வேலைகள் எடுபடாது. போலோ விளையாட்டு போட் டிகளில் அதிக அளவில் வீரர், வீராங்கணைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். இதற் கெல்லாம், மாநில அரசு முன் னெடுத்த சிறந்த திட்டங்களே காரணம்.

பணமதிப்பிழப்பு திட்டம் மூலம் நாட்டில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகளை நடு ரோட் டில் நிறுத்திய மோடி, அவர் களை தங்களது தொழிலை விட்டே வெளியேற்றி விட் டார். நாட்டில் 6% கருப்பு பணம் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. மற்றவை அனைத்தும் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப் பட்டுள்ளது. ஆனால், இதை யெல்லாம் மறைத்துவிட்டு மோடி நாட்டு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாய் ஜாலத்தில் ஈடு பட்டுள்ளார். மோடியின் வாக் குறுதிகளை மக்கள் நிராகரிப் பார்கள். இவ்வாறு கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner