எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத்தில் கள்ளநோட்டுகள் அச்சடித்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது, அவர்களிடம் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரம் மற்றும் பேப்பர், இங்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள அனுமன்னாதி என்ற பகுதியில் கள்ளநோட்டுகளை மாற்றித்தருவதாகக் கூறி இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர் களிடம் நடத்திய விசாரனையில், இவர்கள் மபி மற்றும் அரியானா பகுதியில் இருந்து கள்ளநோட்டுகளை கொண்டு வரும் தரகர் களாக செயல்பட்டது தெரியவந்து.

குஜராத், மபி உள்ளிட்ட வடமாநிலங் களில் புதிய 2,000 நோட்டுக்களில் சில கள்ளநோட்டுகள் போல் உள்ளன என்று வங்கிகளுக்கு வந்த புகாரை அடுத்து, புதிய 2000 நோட்டுகள் பரிசோதிக்கப்பட்டபோது, சில நோட்டுகள் அச்சுஅசலாக 2000 நோட்டுகளைப்போன்று புழக்கத்தில் விட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, வட இந்தியாவில் சிறப்புக் காவல் துறை குழுவினர் சோதனை நடத்தினர். கடந்த வியாழன் அன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் கள்ளநோட்டுகளை மாற்றித்தரும் கும்பல் ஒன்று அனுமன்னாதி பகுதியில் தங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்குள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்தப்பட்ட போது சந் தேகத்திற்கிடமான வகையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த இருவரைக் கைது செய்து, அவர்கள் தங்கியிருந்த அறையை பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது படுக்கை விரிப்பிற்கு அடியில் ஒரு லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைப் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டது,  இதனை அடுத்து அவர்களிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்தினர், பின்னர் அவர்களிடம் கள்ளநோட்டைப் பெற வந்த மேலும் இரண்டு பேருர் ஒரு காரும் கைப்பற்றப் பட்டதுடன்.

இவர்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து போபால் மற்றும் அரியானாவின் சில பகுதிகளில் குஜராத் காவல்துறை, அந்த அந்த மாநில காவல்துறையுடன் இணைந்து சோதனைகள் நடத்தியது. அப்போது, அங்கு கள்ள நோட்டு அச் சடிக்கும் இயந்திரம் மற்றும் தளவாடப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் அதற்கு உபயோகப்படுத்தும்  பேப்பர் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சோதனை யில் புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் 12 .45 லட்சம் அளவிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பற்றி மேலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் இரண்டு மாநிலங்களில் அதிக அளவு கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டிருப்பது தெரியவந்துள்ளது.  சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து கள்ள நோட்டுகள் இந்தியாவிற்குள் ஊடுரு வியுள்ளதாக உளவுத்துறை கொடுத்த அறிக்கை வெளியான பிறகு, இந்திய மாநிலங்களிலேயே கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டிருப்பது அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது.

மத்திய அரசின் சார்பாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் போது கூறியதாவது: இந்தப் புதிய நோட்டுகளை யாராலும் எளிதில் கள்ளநோட்டுகளாக அச்சடிக்க முடியாது என்றும், அப்படி அச் சடித்தால், எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்றும் கூறியிருந்தது, மேலும் புதிய ரூபாய் நோட்டை அச்சடிக்கும் முன்பாக பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து அதன் பிறகே அச்சடித்தோம் என்றும் கூறப் பட்டது. ஆனால் புதிய ரூபாய் நோட்டு வெளியான இரண்டு நாள்களிலேயே கள்ள நோட்டுகள் பிடிப்பட்டதும், 2 மாதங்களுக்குள் லட்சக்கணக்கான கள்ள நோட்டுக்கள் பிடிபட்டு இருப்பதும் மத்திய அரசின் போக்கின் மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் உள்ள வங்கி ஏடிஎம் மய்யத்தில் ரூ.2000 மதிப்பிலான போலித்தாள்கள்

இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் வெளியிடப்பட்டுவரும் பணத்தாள்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இருப் பினும், போலியான பணத்தாள்கள் புழக்கத் தில் விடப்படுவது அரசுக்கு பெரும் அறைகூவலாக இருந்து வருகின்றது.

அவ்வப்போது பாதுகாப்பு அம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய பணத்தாள் களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களைப்போல், மாதிரி பணத்தாள் களாக வழக்கமான பணத்தாளின் அளவை விட சிறிய அளவில்  விளையாட்டாக குழந்தை களுக்காக பல்வண்ண அச்சில் வெளியாகி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது டில்லியில் உள்ள ஸ்டேட்  வங்கியின் ஏடிஎம் மய்யத்தில் ரூ.2000 மதிப்பிலான பணத்தாள்கள் குழந்தைகள் வங்கியின் பெயரால்  வெளி யாகி உள்ளது.

குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைப்போல் வெளியாகின்ற சிறிய நோட்டுகளைப்போல் இல்லாமல், அரசு வெளியிடும் பணத்தாள்களின் அளவிலேயே வெளியிடப்பட்டு, அதுவும் ரூ.2000-த்துக்கான பண மதிப்புடன் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட் டுள்ளது தெரிய வந்துள்ளது.

டில்லி சங்கம் விகார் பகுதியில் டி.பாயிண்ட் பகுதியில் உள்ள ஏடிஎம் மய்யத்தில் பணம் எடுப்பதற்காக ரோகித் என்பவர் சென்றார். ரூ. 8000 பெறும்போது, நான்கு நோட்டுகளும் போலியானவை யாக, அதிலும் இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் இடத்தில் குழந்தைகள் வங்கி என்று பொறிக்கப்பட்டு, வரிசை எண் வெறும் பூச்சியங்களைக் கொண்ட விளையாட்டு பணத்தாள், வங்கியின் ஏடிஎம் மய்யத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner