எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மங்களூரு, மார்ச்.19- இந்திய பகுத் தறிவாளர் சங்கத்தின் தேசிய தலைவர் (Federation of Indian Rationalists Association -FIRA)   பேராசிரியர் நரேந்திர நாயக். கருநாடக மாநிலம் மங்களூரு பகுதி ய¤ல் தன்னைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை பேரா சிரியர் நரேந்திர நாயக் புகாராக காவல் துறையினரிடம் அளித்துள்ளார். கொலை காரர்களின் பட்டியலில் அடுத்தபடியாக தம்மைக் குறிவைத்துள்ளார்கள் என்று பேராசிரியர் நரேந்திர நாயக் புகாரில் தெரிவித்துள்ளார்.


காரில் பேராசிரியர் நரேந்திர நாயக் சென்று கொண்டிருந்தபோது, அக்காரை வேகமாகத் தொடர்ந்து வந்த இருசக்கர வண்டிய¤ல் இருந்த இருவர், காரின் டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக உண்மைக்கு மாறாக கூறியுள்ளனர். இரு சக்கர வண்டியில் வந்தவர்களின் எச்சரிக்கை போலியானது என்று உணர்ந்த நரேந்திர நாயக் காரை நிறுத்தாமல் சென்று, அவர்களிடமிருந்து தப்பியுள்ளார்.

கருநாடக மாநிலத்தில் தகவல் பெறும் உரிமைச்சட்ட செயற்பாட்டாளர் வினாயக் பாலிகா கொல்லப்பட்டார். அவருடைய நினைவைப்போற்றும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வினாயக் பாலிகாவின் நண்பர்களுடன் இணைந்து பேராசிரியர் நரேந்திர நாயக் 21.3.2017 அன்று வினாயக் பாலிகா நினைவு நாள் கூட் டத்தை நடத்திட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அந்நிகழ்வில் நரேந்திர நாயக் பங்கேற்பதை தடுக்கும் நோக் கிலேயே அவரைக் கொலைசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் நரேந்திர நாயக் கூறியுள்ளார்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களின் பாது காப்பில் இருந்து வருபவர் ஆவார்.
ஆனால், கடந்த 16.3.2017 அன்று காவலர்களின் பாதுகாப்பில்லாமல் பேராசிரியர் நரேந்திர நாயக் சென்றுள் ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “காலை 10 மணிக்கு வந்தால் போதும் என்று காவலர்களிடம் கூறியிருந்தேன். காலை நேரத்திலேயே சில அவசர வேலைகள் இருந்ததால் நான் மட்டும் தனியே காரை ஓட்டிக்கொண்டு சென் றேன். அப்போதுதான் இளைஞர் ஒருவர் என்னை நிறுத்த முயன்றார்’’ என்றார்.

பேராசிரியர் அளித்துள்ள கொலை முயற்சி புகாரையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை கருநாடக காவல்துறை இரு மடங்காக அதிகரித் துள்ளது.

உர்வா காவல்நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ள தாவது:
“நான் காலை 7 மணியளவில் தனியே காரில் சென்று கொண்டிருந்த போது, லால்பாக் சாலையை நெருங்கும் போது, இரு சக்கர வண்டியில்  இளை ஞர்கள் இருவர் காருக்கு மிக நெருக்க மாக வேகமாக வந்தார்கள். காரின் டயர் ஒன்று பஞ்சர் ஆகிவிட்டதாகக் கூறினார்கள்.  காரை அவர்கள் நெருங்கிவந்த விதமே அவர்கள் என்னைக் கொல்லத் திட்ட மிட்டுள்ளார்கள் என்று என்னுடைய உள்ளுணர்வு எச்சரிக்கையுடன் உணர்ந்த காரணத்தால், காரை நான் நிறுத்தாமல் சென்று அவர்களிடமிருந்து தப்பினேன்’’ என்றார். சமூக செயற்பாட்டாளரான வினாயக் பாலிகா கடந்த ஆண்டு கொல்லப்பட்டார்.

அவருடைய நினைவு நாளில் கொலைகாரர்கள் மீதான நட வடிக்கை  முறையாக எடுக்கப்படவேண் டும் என்று வலியுறுத்தல்கள் முதலா மாண்டு நினைவுநாளில் தீவிரப்படுத்தப் படும் என்பதால், தொடர்ச்சியாக அந் நிகழ்வை நடத்தக்கூடாது என்று கொலை அச் சுறுத்தல்கள் வந்தவண்ணம் உள்ளன என்று காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட் டுள்ளது.

இந்நிலையில்தான் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக பேராசிரியர் நரேந்திர நாயக் காவல்துறையினரிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பரப் புரை செய்து வருகின்ற நரேந்திர நாயக் குக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்ற நிலையில் தற்போது மங்களூரு காவல்துறையினர் பாது காப்பை இருமடங்காக அதிகரித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner