எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காந்திநகர், மார்ச்.19 குஜராத் மாநில அரசு அம்மாநில சட்டப் பேரவை யில் பசுவதையில் கடுமையான தண் டனை அளிக்கும் வகையிலான சட்ட வரைவை தாக்கல் செய்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின்போது, குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1954இல் திருத்தம் செய்யப்பட உள்ளது. அத்திருத்தத் தின்படி, பசு மாட்டைக் கொன்றால், கடுமையான தண் டனை அளிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

குஜராத் விலங்குகள் நல சட்டம் 1954இல் பெரிய அளவில் மாற்றங்களை செய்து குஜராத் விலங்குகள் காப்புச் சட்டம் 2017 என்கிற பெயரில்  சட்ட வரைவு அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

அப்புதிய சட்டத்தின்படி, பசு மாடு, கன்றுகள், எருதுகள் மற்றும் வண்டிமாடுகள் ஆகியவற்றை கொல்பவர்களுக்கு தண்ட னையாக ஏழு ஆண்டுகளுக்கு குறையாமல் 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அளிக்கப்படும். ஆயுள் தண்டனைக்கு நிகராக பசுவதைத் தடைச்சட்டத்தின் பெயரால் தண்டனை அளித்திட குஜராத் அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது.

குஜராத் விலங்குகள் நல சட்டம் 1954இல் ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அப்போது திருத்தப்பட்ட சட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை என்று கூறப்பட்டது.
மேலும், தண்டத்தொகை ரூ.50ஆயிரம் வரை என தற்போது இருப்பதைவிட இரு மடங்காக உயர்த்தப்பட்டு புதிய சட்டத்தின் படி  தண்டத்தொகை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner