எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 21 பாபர் மசூதி- ராமர் கோவில் பிரச்சினைக்குநீதிமன்றத்துக்கு வெளியே பேச்சு வார்த்தைமூலம் தீர்வு காணவேண்டும்என்று உச்சநீதிமன்றம் இன்று (21.3.2017) அறிவுறுத்தி யுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் கூறிய தாவது:

இந்த பிரச்சினை மிகவும் உணர்வுப்பூர்வ மானது.இத்தகையவிவகாரங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண் டும். நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண உச்சநீதிமன்றமும் உதவ தயாராக இருக்கிறது. இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது அனைத்து தரப்பும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாமா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி கேஹர் பெஞ்ச் தெரிவித்தது.

இன்றைய விசாரணையின் போது மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குறுக்கிட்டு, இந்த பிரச்சினையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.

ஆனால் உச்சநீதிமன்றமோ, அனைத்து தரப் பும் உட்கார்ந்து பேசி தீர்வு காணவேண்டும். உச்சநீதிமன்றமே இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் நடுவரையும் தெரிவிக்கும் எனக் குறிப்பிட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner