எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மார்ச் 23 பாஜக தலை வர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, அப்போதைய உ.பி.முதல்வர் கல்யாண் சிங் ஆகியோருக்கு எதிராகதொடரப்பட்டபாபர் மசூதி இடிப்பு வழக்கு விசா ரணையை உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. இவர்கள் கூட்டு சதி செய்ததாக சிபிஅய் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.

ஏற்கெனவே இந்த வழக் கில் ரேபரேலி நீதிமன்றம் 13 பேரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றமும் 2010 இ-ல் உறுதி செய்தது. ஆனாலும் அத்வானி உள்ளிட்டோரை விடுவித்ததை எதிர்த்து மஹ் பூப் அகமது (தற்பொது இவர் உயிருடன் இல்லை) என்பவரும், சிபிஅய்யும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்நிலையில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் ரோஹிண்டன் நாரி மன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அத்வானி யின்வழக்குரைஞர்கே.கே. வேணுகோபால், கேரளா சர்ச்சில் இரு தரப்பினருக் கிடையே ஏற்பட்ட சர்ச்சை வழக்கில், தான் அவ சரமாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி கள், எனவே, நாங்கள் விசா ரணையை ஒத்தி வைக்கிறோம் என்றனர். மேலும் ஏப்ரல் 6- ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறுவதற்குள் சிபிஅய் மற்றும் வாதிகள் தங்கள் தரப்பினை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மார்ச் 6- ஆம் தேதி இந்த வழக்கு விசா ரணை நடைபெற்ற போது நீதிபதி நாரிமன், இந்த வழக்கில் ஏதோ ஒன்று விசித்திரமாக உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட விதத்தை நாங்கள் முதற்கண் ஏற்க வில்லை. மேலும் ஏன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் இன்னும் செய்யவில்லை? சட்ட நடைமுறைகளின்படி இவ்வாறு விடுவிப்பு செய்ய முடியாது என்றார்.

அப்போது அத்வானி வழக் குரைஞர் வேணுகோபால் தன் தரப்பு வாதங்களை முன்வைத்து இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 186 சாட்சியங்களையும் மீண்டும் அழைக்க முடியுமா என்றார்.

ஆனால், நீதிபதிகள் அவர் வாதத்தை ஏற்காமல் மார்ச் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர், ஆனால் நீதிபதி நாரிமன் இன்றுதான் வர முடிந்தது என்பதால் இன்று (23.3.2017) தேதி இந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை மீண்டும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடை பெறுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner