எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பதியில் ஏழுமலையான் சிலைக்கு வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் புனுகு வாசனைத் திரவத்தைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. ÔபுனுகுÕ என்பது அரிய வகை பாலூட்டி விலங்கினமான புனுகுப்பூனையிடமிருந்து பெறப்படுவ தாகும்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் திருப் பதி தேவஸ்தான வளாகத்தில் புனுகுப் பூனைகளை வளர்க்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோவில் நிர்வாக அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி சிலைக்கு பூர்ணாபிஷேகம் செய்ய புனுகு எனும் வாசனைத் திரவியம் தேவைப்படுகிறது. இத்துடன் குங்குமப் பூ, சந்தனம், கற்பூரம் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த அபிஷேகத்தைச் செய்கிறார்கள். இதில் புனுகு கிடைப்பது தற்போது மிகவும் சிரமமாகியுள்ளதாம். இந்த வாசனைத் திரவியத்தை புனுகுப் பூனைகளின் வயிற்றுப் பகுதியில் உருவாகும் ஒருவித பிசினிலிருந்து தயாரிக்கிறார்கள். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூர்ணா பிஷேகத்துக்கே சற்றே சிக்கல் ஏற் பட்டுவிட்டதாம். புனுகு கொண்டு அபிஷேகம் செய்வதால், சுவாமி சிலை வழவழப்பாக அதே சமயம் கீறல்கள் ஏற்படாமல் பளிச்சென்றும் காட்சி தருமாம். இது கோயில் பராமரிப்பு பழக்க நடைமுறை என்பதால் அதை சரியாகக் கடைப்பிடிக்க கோவிலின் நிர்வாகம் அதிக செலவில் புனுகை வாங்கி வருகிறது.

இதைவிட புனுகுப் பூனைகளை வாங்கி வளர்ப்பதால் தேவையான அளவுக்கு புனுகு கிடைக்கும் என முடிவு செய்து மத்திய அரசின் அனுமதி கோரியுள்ளது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம். அழிந்து வரும் அரிய வகை விலங்குகள் பட்டியலில் உள்ள புனுகுப் பூனைகள் வளர்க்கவும், புனுகு சேகரிக் கவும் மத்திய அரசின் அனுமதி கட் டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

புனுகுப்பூனையின் உடலிலிருந்து வால் பகுதியில் கழிவிடப்பகுதியி லிருந்து சுரப்பியின்மூலமாக மெழுகு போன்ற பொருள் உற்பத்தியாகிறது. அது மிகுந்த வாசனையை வெளிப்படுத்து வதாக உள்ளதாகும். மெழுகுபோன்ற அப்பொருள் நல்லெண்ணெய்யில் கரைக்கப்பட்டு, வாரந்தோறும வெள் ளிக்கிழமைகளில் பூஜைகளில் பயன் படுத்தப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளாகவே திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கும், வனத்துறையினருக்கும் இடையில் மோதல்போக்கு இருந்துவருகிறது. தற்போது மீண்டும் வெளிச்சத்துக்கு இப்பிரச்சினை வெளிவந்துள்ளது.

கோயில் நிர்வாகத்திடமிருந்து

விலங்குகள் பறிமுதல்

2008ஆம் ஆண்டுவரை கோயில் நிர்வாகம் புனுகுப்பூனைகளை வளர்ப் பதற்கு பண்ணை அமைத்து பராமரித்து வந்தது. இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் நிர்வகிக் கப்படுகின்ற புனுகுப்பூனைகள் வளர்ப் புப் பண்ணைகளுக்கு சென்று வனத் துறையினர் பண்ணையிலிருந்து புனுகுப் பூனைகளைப் பறிமுதல் செய்தார்கள். ஆந்திரப்பிரதேச வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம் 1972 இன்கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

வனத்துறையினர் பறிமுதல் செய்த புனுகுப்பூனைகளை சிறீ வெங்கடே சுவரா விலங்கியல் பூங்காவின் பாதுகாப்பில் விட்டுள்ளனர். புனுகுப் பூனை விவகாரத்தில் வனத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தான நிர் வாகத்துக்குமிடையே மோதல் வலுப் பெற்று வருகிறது.

கோயில் நிர்வாகத்தின்மீது பதிவான வழக்கு

2013ஆம் ஆண்டில் திருப்பதி கோயில் நிர்வாகத்தினர்மீது ஆந்திர மாநில வனத்துறை ஆந்திர மாநில வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டம் 1972இன்கீழ் குற்ற வழக்கைப் பதிவு செய்தது. நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு இம்மாத முதல் வாரத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. பிரச்சினை தீர்க்கப்படாமல், தொடர்ந்து கொண்டிருக்கின்ற சூழலில், எட்டப் படவேண்டிய தீர்வு மறக்கடிக்கப்பட் டுள்ளது.

புனுகு பூனைகள் இனப்பெருக்கத்துக்காக

கோயிலின் சார்பில் இருட்டறைகள் ஏற்பாடு

பண்ணை வளர்ப்பு முறைகளில் புனுகுப்பூனைகள்  இனப்பெருக்கம் செய்வது குறைந்து போகிறது. 2006ஆம் ஆண்டில் புனுகுப்பூனைகள் வனப் பகுதிகளில் வசிக்கின்ற சூழல்போன்று இருட்டறைகள் சிறீவெங்கடேசுவரா உயிரியல் பூங்காவில் அமைக்கப் பட்டது.

இருந்தபோதிலும், கோயிலில் நடைபெறும வாராந்திர பூஜைகளுக்காக கோயில் நிர்வாக ஊழியர்கள் புனுகுப் பூனைகளிடமிருந்து தேவையான அளவுக்கு ÔபுனுகுÕ எடுக்க அனுமதிக் கப்பட்டனர்.

ஆனால், இத்திட்டத்துக்கு வனத் துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித் தார்கள். புனுகுப்பூனைகளிடமிருந்து புனுகு எடுப்பது என்பதே வனவிலங் குகள் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவ தாகும் என்று வாதிடுகின்றனர்.

தற்போது, உயிரியல் பூங்காவில் புனுகுப்பூனைகளுக்கென இருட்டறை கள் அமைப்பதற்காக நிதியை ஒதுக்கிட கோயில் நிர்வாகம் முன்வந்துள்ளது. மேலும் கோயில் நிர்வாகத்தினர் வனத் துறை அலுவலர்கள் முன்னிலையில் தேவையான அளவில் புனுகு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதியை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவருகின்ற அனிமல் கேர் லேண்ட் எனும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சிறீகாந்த் பாபு கூறும்போது, “தற்போது, உயிரியல் பூங்கா அலுவலர்களே புனுகை புனுகுப் பூனைகளிடமிருந்து சேகரித்து, கோயில் நிர்வாகத்தினரிடம் அளிக்கிறார்கள். கோயில்களில் கடவுள் சிலைகளில் புனுகு பயன்படுத்தப்பட்டுவருவது என்பது உணர்வுபூர்வமாகவும், பழக் கத்தை அடிப்படையாகவும் கொண்டு  இருக்கிறது. ஆகவே, கோயில்களில் புனுகுத் தேவைக்காக உள்ள புனுகுப் பூனைகளை  உணர்வுபூர்வமாக இயற் கையான முறையில் வளர்ந்திட விட்டுவிடவேண்டும்.  அப்போதுதான் இருசாராருக்கும் மனஅமைதி ஏற்படும்’’ என்றார்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் உயிரியல் பூங்காவில் புனுகுப்பூனை களுக்காக இருட்டறைகள் அமைக்கப் பட்டுள்ளதை வரவேற்கின்ற வனத் துறையினர் புனுகுப்பூனைகளிடமிருந்து கோயில் பூஜைகளுக்காக புனுகு சேகரிப்பதை எதிர்த்துவருகிறார்கள்.

வன விலங்குகள் தலைமைப் பாதுகாப்பு அலுவலர் பி.வி.சலபதிராவ் கூறும்போது, “நாங்கள் வன விலங்கு களின் பாதுகாவலர்கள் மற்றும் பரா மரிப்பவர்கள்தான். விலங்குகளிலிருந்து பொருள்கள் எடுப்பதையோ, விற்பனை செய்வதையோ நாங்கள் செய்ய மாட்டோம்’’ என்றார்.

பன்னாட்டு இயற்கைபாதுகாப¢பு உயிரினங்களுக்கான ஆணையம்

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு மற்றும் உயிரினங்களுக்கான ஆணை யத்தின் பிரான்சீஸ் சேவியர்  கூறும் போது, “பழைமையாக பின்பற்றப்பட்டு வரும் முறையான புனுகு பயன்பாடு என்பது மிகவும் விலை மதிப்புமிக்க தாக உள்ளதாகும். ஆயுர்வேத மருத் துவத்திலும் புனுகு பயன்பாடு உள்ளது’’ என்றார்.

கடந்த அய்ந்து ஆண்டுகளாக தென்னிந்திய சிறிய பாலூட்டிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருபவரான சேவியர் கூறும்போது, “ஒரு கிராம் புனுகின் மதிப்பு ஒரு கிராம் தங்கத்துக்குச் சமமாக உள்ளது. புனுகு மிகவும் கிடைத்தற்கரிய மதிப்புக்குரிய பொருளாக உள்ளது’’ என்றார்.

9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் புனுகு மருத்துவ நூல்களில் இடம் பெற்றுள்ளது என்று தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேம்ஸ் மெக்ஹுக் கூறுகிறார். வெளி நாட்டைச்சேர்ந்த பயணிகள் குறிப்பில் சமஸ்கிருதத்தில் புனுகுகுறித்து கூறப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரச்சினைக்குரிய புனுகுபூனை களும் கடவுளின் நிறமும் சுரப்பிகளும்,  இந்திய வரலாறு குறித்து ஜேம்ஸ் மெக்ஹக் கூறிப்பிடும்போது, “14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரியர் ஜோர்டானஸ் பூனை வகையில் உள்ள விலங்கினத்தின் வியர்வை நறுமணம் கொண்டதாக இருந்துள்ளது. அவ் விலங்கினம் குறிப்பிட்ட மரத்தில் உராயும்போது, அந்த நறுமணப்பொருள் பின்னர் மரத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்த முறையின்படி, பழைய முறை யிலேயே இன்னமும் திருப்பதியில் புனுகு சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியர்களின் சிறப்பை உணர்த்து வதாக உள்ளது’’ என்றார்.

புனுகு மிக பழைமையான வாச னைத் திரவியம் ஆகும். இது புனுகுப் பூனை விலங்குகளிலிருந்து பெறப்படு கிறது. இது கீட்டோன் வகையைச் சேர்ந்தது. செறிவான கஸ்தூரி வாச னையைக் கொண்டதாகக் காணப்படும். காரணம் புனுகும் கஸ்தூரியும் ஒரே வாசனைக் கூறாகிய மக்றோ சைடிக் கேட்டொன் (னீணீநீக்ஷீஷீநீஹ்நீறீவீநீ ளீமீtஷீஸீமீ) வகையைச் சேர்ந்தது.

புனுகுப்பூனைகள் வனப்பகுதிகளில், காப்பித்  தோட்டங்களில் இருக்கும். புனுகுப் பூனை சாப்பிட்டு எச்சமாகப் போட்ட காப்பி விதைதான் நல்ல காப்பி விதையாம். ஏனென்றால் இருப் பதிலேயே நல்ல காப்பி பழத்தைத்தான் புனுகுப் பூனை சாப்பிடுமாம். அதி களவில் இந்தோனேசிய நாட்டில்தான் இந்த வகையான "காபி லுவக்" காப்பி விதைகள் கிடைக்கின்றதாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner