எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, மார்ச் 28 ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர் கள் கூட்டம் பாட் னாவில் நடை பெற்றது. இதில் கட்சித்தலைவர் லாலு  கலந்து கொண்டு பேசிய தாவது:- உத்தர பிரதேசத்தில் புதியதாக பதவி ஏற்றுள்ள முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத் முதல்-அமைச்சர் இல்லத்தை கங்கை நீரால் கழுவி புனிதப்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.

இவர் இப்படி கூறியிருப்பது, தவறான பாரம் பரியத்தை காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் அவரு டைய கருத்துக்கள் உள்ளன.

உத்தரபிரதேசத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அங்கு மதச்சார்பற்ற ஓட்டுகள் பிரிந்த ஒரே காரணத்தினால் தான் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனால் பஞ்சாபிலும், பீகாரிலும் நாம் ஒற்றுமையாக இருந்து அவர்களை தோற்கடித்து இருக்கிறோம்.

அடுத்து நாம் அனைவரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவ தற்கு தயாராக வேண்டும். பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற அனைத்து கட்சிகளையும் ஒன்றி ணைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து நரேந்திர மோடிக்கு எதிராக பீகார் முதல்- அமைச்சர் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்து வீர்களா? என்று கேட்டதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்த பிறகு இது பற்றி முடிவு செய்வோம். ஆனால் அதற்கு முன்பு நிதிஷ்குமார் பெயரை இதில் இழுப்பது அவரை அவமதிக்கும் செயலாகும் என்று கூறினார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner