எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மார்ச் 30 ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் குறித்து காரைக்கால் பகுதி மக்கள் அச்சப்பட தேவையில்லை என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்

புதுச்சேரியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழக பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தை காரைக்கால் பகுதி மக்கள் ஏற்காத பட்சத்தில் புதுவை அரசும் ஏற்காது என்று ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தோம்.

இதுதொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து காரைக்கால் பகுதி மக்களின் எதிர்ப்பு குறித்து தெரிவித்து இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்போது மத்திய அமைச்சர் ஒரு கடி தத்தை என்னிடம் காட்டி, காரைக்காலில் இந்த திட் டத்தை கொண்டுவரவில்லை என்று விளக்கம் அளித்தார்.

காரைக்காலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் நாகப்பட்டினம் மாவட்ட பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளோம் என்று தெளிவாக கூறினார். எனவே இந்த திட்டம் குறித்து காரைக்கால் பகுதி மக்கள் அச்சப்பட தேவையில்லை.

இந்த திட்டத்துக்கு தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களே என்று கேட்டதற்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் கருத்து களை கேட்டுதான் இந்த திட் டத்தை நடைமுறைப்படுத்து வோம் என்று மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்தார். இந்த திட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் அதை தெளிவுபடுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத் தும் தமிழக விவசாயிகளையும் சந்தித்துப் பேசினேன். தமிழக வறட்சி நிவாரணத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், ரூ.1,700 கோடி தருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்கால் பகுதி களையும் மத்தியக்குழு வந்து பார்வையிட்டு சென்றுள்ளது.

ஆனால் இதுவரை நிவா ரணம் எதுவும் அறிவிக்கப்பட வில்லை. இதுதொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச் சரை சந்தித்து பேசும்போது தமிழக நிலவரம் குறித்தும் பேசுவதாக விவசாயிகளிடம் தெரிவித்துள்ளேன் என்று அவர் கூறினார். இவ்வாறு நாராயண சாமி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner