எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, மார்ச்.30 மேற்கு வங்க மாநிலத்தில் வகுப்புவாத பிளவுகளை ஏற்படுத்திவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா  எச்சரித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா  தலைமையிலான திரிணமுல் காங்கிரசு அரசு இருந்த போதிலும், ராஷ்டிரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்-.) அமைப்பு தன்னுடைய கிளையை மாநிலத்தில் உறுதிப்படுத்தி வருகிறது.  ஜிகாதி  என்கிற அச்சுறுத்தலின்மூலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விரிவு படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உண்மையில் மாநிலத்தில் திரிண முல் காங்கிரசு அரசு இருக்கும்போதே ஆர்.எஸ்.எஸ்-. அமைப்பை விரிவு படுத்திட திட்டமிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-. அமைப்பின் மேற்கு வங்க செய லாளர் ஜிஷ்ணு போஸ் கூறியதாவது: திரிணமுல் காங்கிரசுடன் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், மாநிலத்தில் வகுப்புவாத வன்முறைகள் தலைதூக்க அவர்கள் அனுமதிக்கக் கூடாது. அப்படியான வகுப்புவாத வன்முறைகள் குறித்து எடுத்துச் சொல் லப்படவில்லை என்றால், மேற்கு வங்கமே மோசமான பிரச்சினைகளுக்கு உள்ளாக நேரிடும்’’ என்றார்.

வகுப்புவாத வன்முறைகளில் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ள முசுலீம் வகுப்பைச்சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் மம்தா  அமைச் சரவையில் இடம் கொடுத்துள்ளார். அவர் பெயரைக் குறிப்பிடாமல் போஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுப்பு வாத வன்முறைகள் குறித்த பட்டிய லிடுகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடை பெற்றுவருகின்ற வகுப்புவாத வன் முறைகளை  ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊதிப்பெரிதாக்கி வருகிறது என மேற்கு வங்க அரசு ஆர்.எஸ்.எஸ்.மீது குற்றம் சுமத்தி வருகிறது. அதுகுறித்து முதல்வர் அதை நிரூபிக்க வேண்டும் என்று போஸ் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். திட்டம்

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. முதலாவது அமைப்பை மேற்குவங்கத்தில் விரிவுபடுத்துவது, அடுத்து ஜிகாதி அமைப்புகளை மேற்கு வங்கத்தில் வேர்பதிக்க விடாமல் செய்வதாகும்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்- ஷாகாக்களின் (ஆர்.எஸ்.எஸ்-. பயிற்சி முகாம்கள்) எண்ணிக்கையை அதிகரித்திட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் 1,700 ஷாகாக்கள் நடந்து வருகின்றன. நாடுமுழுவதும் 57,000 ஷாகாக்கள் உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் 20,000 பிரச்சாரக்குகள் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்-. அமைப்பின் பரப்புரையாளர்கள் உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம்குறித்து போஸ் கூறும்போது,

“ஆர்.எஸ்.எஸ்- அமைப்பின் சார்பில் விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டுள் ளன. மேலும் சங் பரிவாரங்களின் முக்கிய குறிக்கோளே மாநிலத்தில் இயங்கக்கூடிய ஜிகாதி அமைப்புகள் குறித்து மக்களிடையே விழிப்பை ஏற்படுத்துவதுதான். அதுபோன்ற சக்தி களுக்கு எதிராக போராட வேண்டிய தேவை குறித்து அரசியல் கட்சிகளை நாடிச்சென்று வலியுறுத்துவது. பின்னர், வீடுதோறும் சென்று இந்தப்பிரச்சினை குறித்து பரப்புரை செய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

வங்கத்தில் பதற்றங்களை  ஏற்படுத்திவரும் ஆர்.எஸ்.எஸ்.
அமைச்சர் பார்த்தா குற்றச்சாற்று

மேற்கு வங்க நாடாளுமன்ற விவகா ரத்துறை அமைச்சர் பார்த்தா  இதுகுறித்து கூறியதாவது: மத ரீதியிலான பிளவுகளை உண்டாக்கி, வகுப்புவாத பதற்றங்களை மாநிலத்தில் ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது என்பது தெளி வாகவேத் தெரிகிறது.

மேற்கு வங்கத்தில் பன்முகத்தன்மை பாதிக்கப்படாது என்பதை உறுதிப்படுத் துவம் வகையில், எல்லா வகையிலும் நாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

மம்தா பானர்ஜி எச்சரிக்கை

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா  அண்மையில் 23.3.2017 அன்று செய்தியாளர்களிடையே பேசும்போது, வகுப்புகளின் அடிப்படையில் பிளவு களை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ். தீவிர மாக முயன்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner