எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, மார்ச் 31 உ.பி., யில் மஹாகவுஷல் விரைவு வண்டி ரயிலின், எட்டு பெட் டிகள் தடம் புரண்டதில், பயணிகள், 52 பேர் படுகாயம் அடைந்தனர்; அவர்களில், எட்டு பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள் ளார். இந்நிலையில், ம.பி., மாநிலம் ஜபல்பூரிலிருந்து, டில்லி நிஜாமுதீன் நோக்கி சென்ற மஹாகவுஷல் விரைவு வண்டி ரயில், நேற்று (30.3.2017) காலை தடம் புரண் டது. ரயிலின் எட்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகியதால், அதில் பயணித்த, 52 பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந் தோரை மீட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரில், எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ள தாக, மருத்துவர்கள் தெரிவித்துஉள்ளனர். இந்த விபத்தால், அந்த மார்க்கத்தில் செல்லும், 14 ரயில்களின் போக் குவரத்து பாதிக்கப்பட்டது.

மஹாகவுஷல் விரைவு ரயில் விபத்துக்கான காரணம் குறித்து, ரயில்வே இணைய மைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரண மாக, ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. அந்த இடத்தில் ஏற்கனவே பிளவு இருந்ததற் கான தடயங்கள் இல்லை. தண்டவாளத்தில் புதிய விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner