எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ ஏப். 2 உத்தரப் பிரதேசம் முசபர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 70 மாணவிகளை பள்ளி நிர்வாகம் நிர்வாணப்படுத்தி மாதவிடாய் குறித்து அப்பெண்களிடம் பரி சோதித்துள்ளது. தீட்டுப் பட்ட பெண்கள் வகுப்புகளுக்குச் செல் லக்கூடாது என்பதற்காக இவ் வாறு பள்ளி நிர்வாகம் செயல் பட்டிருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

முசபர் நகரில் உள்ள உறை விடப் பள்ளி ஒன்றில் 70 மாண விகள் தங்கிகல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் குறித்து பரிசோதனை செய்வதாக அந்த மாணவிகள் ஏ.என்.அய் என்ற செய்தி நிறு வனத்திற்கு பேட்டியளித்துள்ளனர்.

அவர்கள் கூறும் போது, "சில நாள்களாக பள்ளிக்குச் செல்லும் முன்பு எங்கள் வார்டன் வரி சையாக நிற்கவைத்து எங்களை அரை நிர்வாணப்படுத்தி சோத னைச் செய்கிறார். எங்களுக்கு மாதவிடாய் வந்துள்ளதா இல் லையா என்று அவர் பரிசோதிக்க இப்படி செய்கிறார்" என்று செய்தி நிறுவனத்திடம் கூறினர். இந்த செய்தி வெளியான உடன் உறைவிடப் பள்ளிவார்டனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது, "பள்ளி கழிப் பறையில் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டேன், இப்படி யார் அசிங்கப்படுத்தினார்கள் என்பதை அறியவே நான் இப்படிச் செய்தேன், இதில் தவறொன்றுமில்லை. அப்படி மாதவிடாய் வரும் மாணவிகள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு ஒய்வு கொடுத்து விடுவேன்" என்று கூறினார். இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்ததற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.

தொலைக்காட்சிகளில் இந்த செய்தி வெளியான உடன் அந்த விடுதி வார்டனை பள்ளிக்கல்வி நிர்வாகம் தற்காலிகமாக பணி யிடை நீக்கம் செய்துள்ளது.

யோகி ஆதித்தியநாத் தலை மையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதும் இது போன்ற சம்பவம் திடீரென நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கல் வித்துறை அமைச்சர் சிறீகாந்த் சர்மா கூறும்போது "வார்டனின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதற்கு மேல் கூறுவதற்கு ஒன்று மில்லை" என்று தெரிவித்துள்ளார்.

 

 

Comments  

 
#1 Ajathasathru 2017-04-03 19:12
பேய் அரசாண்டால் பிணந்தின்னி சாத்திரங்கள் என இதைத்தான் சொன்னார்களோ?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner