எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொல்கத்தா, ஏப்.4 மக்களி டையே தேசியவாதம் மற்றும் இந்தியர்களின் பண்பாடுகுறித் தும், இந்துத்துவா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் திடவும் ஆர்.எஸ்-எஸ்- அமைப் பின் சார்பில் குறும்பட விழா மேற்கு வங்கமாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் ஏப்ரல் மாதத்திலேயே நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது.

மனுஷ் சாய்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நடத்தப்படுகின்ற குறும்பட விழா நேரடியாக இந்ததுத்துவா என்று குறிப்பிடாமல் Ôமனுஷ் சாய்Õ என்கிற தலைப்பில் குறிப்பிடப்படுகிறதாம்.

மேற்கு வங்க மாநிலத்தின் தெற்குப் பகுதிக்கான ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் (தட் சண பங்கா பிரந்தா பிரச்சார் பிரமுக்) பிப்வா பராய் கூறும் போது, குறும்பட விழா விவே கானந்தரின் மனிதநேய கொள் கையை ஏற்று நடத்தப்படுகிறது என்கிறார். மேலும் அவர் கூறும்போது, பிப்ரவரியிலிருந்து குறும்படவிழாவில் திரையிட விரும்புபவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். 50 பேர் விருப்பம் தெரிவித் துள்ளனர்.   மார்ச் 31 வரை விண்ணப்பங்கள் பெறப்பட் டுள்ளன. குறும்படப் போட்டி களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

விஸ்வ சம்வத் கேந்திரா

ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான விஸ்வ சம்வத் கேந்திரா அமைப்பின் சார்பில் குறும்படவிழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் குறிப்பிடும்போது: “புனை கதைகள், புனைவில்லாதவை, அனிமேஷன், நாடகங்கள், நாடக ஆவணப்படங்கள் உள் ளிட்ட பலவகைகளில் குறும் படங்கள் திரையிடப்படுகின் றன. குறும்படங்கள் 10 நிமிடங்கள் ஓடக்கூடியவையாக இருக்கவேண்டும். குறும்படப் போட்டிகளில் படங்களைத் தேர்வு செய்திட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டு, வெற்றி யாளர்கள் தேர்வு செய்யப்படு வார்கள். திரைப்படங்களில் காட்டப்படுவது போல் இல் லாமல் மேற்கு வங்க மாநில மக்களுக்கு உண்மையான இந் திய பண்பாட்டை நினைவூட் டுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-. செயல் பட்டு வருகிறது. குறும்பட விழா மூலமாக  இந்திய தேசிய வாதங்கள் மற்றும் மனிதத் தன் மையுடனான அணுகுமுறை யுடன் சாதாரண மக்களுக்கு சேவை செய்வது வலியுறுத்தப் படுகிறது’’ என்று குறிப்பிடு கிறார்கள்.

அரசமைப்பின் கோட்பாடுகளின்படி விழா நடக்குமா? இயக்குநர்கள் கேள்வி

தேசிய விருது பெற்றுள்ள திரைப்பட இயக்குநர் கவுதம் கோசே கூறும்போது, “அரச மைப்பு, ஜனநாயகக் கோட் பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும்வரை குறும்பட விழாவில் தவறு ஏற்பட வாய்ப்பிருக்காது’’ என்றார்.

வெற்றிகரமான இயக்குநர் களில் ஒருவரான மைனாக் பவுமிக் கூறும்போது, “புகழ் பெற்ற இந்திய திரைப்படங் களில் அறநெறிப்போக்கு குறித்து கூறுவது என்பது எப்போதும் நுட்பமாக இருக்கும். குறும்ப விழாவில் மதசார்பின்மைக் கருத்துகளுக்கு எந்த அளவுக்கு இடமிருக்கும் என்பதை பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்’’ என்றார்.

ஸ்மார்ட் அலைபேசிகள் உள்ளிட்ட டிஜிட்டல் முறை யில் ஊக்கப்படுத்தும் வகை யில் படப்பதிவுகள்  குறும்பட விழாவில் இடம் பெறுகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner