எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டாக்கா, ஏப். 4- இந்தியாவிற்கு எதிரான எந்த செயலையும் வங்கதேசம் அனுமதிக்காது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் உடன் நடந்த சந்திப்பின் போது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் வங்கதேச சுற் றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தலைமை தள பதி பிபின் ராவத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று (3.4.2017) சந்தித்து பேசி னார். அப்போது இரு நாடுக ளுக்கு இடையேயான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்த னர். அப்போது, வங்கதேச விடு தலை போரின் போது இந்தியா செய்த உதவிக்கு வங்கதேசத்தின் சார்பில் பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இந்தியாவின் நட்பை வங்கதேச மக்கள் மதிப்பதாகவும், இந்தியாவிற்கு எதிரான எந்த செயல்களுக்கும் வங்கதேசம் இடம் தராது என அவர் உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து, இம்மாதம் இந்தியா வரும் ஷேக் ஹசீனா இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

ராணுவ தளபதி பிபின் ராவத் முன்னதாக அந்நாட்டு முப்படை தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர் வங்கதேச விடுதலைப்போரின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய ராணுவத்தில் தான் அப்போது பணியாற்றிய போக்ரா ராணுவ முகாமுக்குச் சென்று பார்வையிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner