எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.9 இந்திராபானர்ஜி தமிழகத்திற்கு கிடைத்த இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாவார்.  1992 ஆம் ஆண்டு காந்த குமாரி பட்னாகர் என்பவர் தான் சென்னை உயர்நீதிமன்றத் தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தவர்.

24.12.1957- அன்று கொல்கத்தாவில் பிறந்த இந்திரா பானர்ஜி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியை முடித்தார். 1985-ஆம் ஆண்டு வழக்குரை ஞராக பதிவு செய்தார். 2002-ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யாக பதவியேற்றார். அதன் பிறகு 2016-ஆம் ஆண்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த இவர் தற்போது தமிழகத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 59 நீதிபதிகள் உள் ளனர். இதில் தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி அவர்களையும் சேர்த்து வெறும் 6 பெண் நீதிபதிகளே உள்ளனர்.

நீதிபதி இந்திரா பானர்ஜியோடு சேர்ந்து, நாட்டிலுள்ள நான்கு முக்கிய உயர் நீதிமன்றங்களுக்கு பெண்கள் தலைமை வகிக்கிறார்கள். அவர்களில் நீதிபதி ரேஹினி டில்லி உயர் நீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாகவும், கர்நாட காவைச் சேர்ந்த மஞ்சுளா செல்லார் மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நிஷிதா நிர்மல் மகாத்ரே கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பணியாற்று கின்றனர். நான்கு பெண்கள் ஒரே நேரத்தில் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை வகிப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் இத்தனைபெண்களா என்றும் நாம் பெருமை கொள்ளமுடியாது, இந்தியாவி லுள்ள நீதிபதிகள் எண்ணிக்கையில் பெண்களின் பங்கு மிகமிகக் குறைவுதான்.  நீதிபதி ஆர்.பானுமதிதான் உச்சநீதிமன் றத்தில் உள்ள ஒரே பெண் நீதிபதி. நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் பதவி வகிக்கும் 652 நீதிபதிகளில், 69 பேர் மட்டுமே பெண்கள். அதிகபட்சமாக மும்பை உயர் நீதிமன்றத்தில் 12 பெண் நீதிபதிகளும், டில்லி உயர் நீதிமன்றத்தில் 11 நீதிபதிகளும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 8 உயர் நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதிகூட இல்லை. முக்கியமாக ஆணாதிக்கமே இங்கும் பெண்கள் தலைமை நீதிபதியாக வருவதை தடுக் கிறது, அப்படி வரும் ஒரு சில பெண் தலைமை நீதிபதிகளும் பல்வேறு சோத னைகளை கடந்தே அந்த இடத்தை அடைகின்றனர்.

கல்வி, தொழில் வளம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வட இந்திய மாநிலங்களில் இதுவரை பெண் நீதிபதிகள் தலைமைப் பதவியேற்க வில்லை. அங்கு பெண்கள் தலைமைப் பதவிதற்கு ஏற்பதற்கு அம்மாநில நீதித் துறை அனுமதிக்க மறுக்கிறது, நாம் நாடாளுமன்றங்களில் 33 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு தேவை என்று நீண்ட காலமாக போராடி வருகிறோம். ஆனால் பெண்கள் திறமையுடன் பணி யாற்றும் நீதிமன்றங்களில் ஒரு விழுக்காடு பெண் நீதிபதிகள் மட்டுமே இருக் கிறார்கள் என்பது பெண்களுக்கு மிகப் பெரிய பின்னடைவே ஆகும், தென்னிந்தி யாவில் தான் நீதித்துறையில் அதிக அளவில் பெண்கள் வழக்குரைஞர்களாக வும், நீதிபதிகளாகவும் உள்ளனர். இன் றுள்ள ஒரே ஒரு  உச்சநீதிமன்ற பெண் நீதிபதி தமிழர்தான், உச்சநீதிமன்றத்தின் ஒரே ஒரு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஃபாத்திமா பீபி அவர்களும் தென் இந்தியர்தான்.

முக்கியமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நிகழும் உபி, ராஜஸ்தான், அரியானா, ம.பி, ஜார்கண்ட், போன்ற மாநிலங்களில் உள்ள நீதிமன்றங் களில் பெண்களுக்காக வாதாட அவர் களுக்கு நியாயம் பெற்றுத்தரும் இடத்தில் பெண்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு  2016 ஆம் ஆண்டில் முதல் பெண் நீதிபதி பதவியேற்றார். கொல்கத்தா உயர்நீதிமன் றம் டில்லி உயர்நீதிமன்றம், இரண்டிற் குமே முதல் பெண் தலைமை நீதிபதி 2014-ஆம் ஆண்டில் தான் பதவியேற்றனர், உச்சநீதிமன்றத்தில் 1950ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 6 பெண் நீதிபதிகள் மட்டுமே இருந்துள்ளனர். 33 சதவீத பெண்கள் நீதிபதிகளாக நீதிமன்றங்களில் பணியாற்ற இன்னும் எத்தனைக் காலம் ஆகுமோ?

மிக முக்கிய துறையான நீதித்துறை யில் பெண்களின் பங்கு குறைவான அள வில் இருப்பது மிகவும் கவலைக்குரியதே? இதுதொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாத்திமா பீபி அவர்கள் 2014-ஆம் ஆண்டு மகளிர் உரிமை நாளன்று கேரளாவில் இருந்து வெளிவரும் இதழ் ஒன்றில் எழுதியதாவது, "பெண்களின் பிரதிநிதித்துவம் நீதித்துறையில், சுதந் திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிய பிறகும் இவ்வளவு குறைவாக இருப்பது நீதித்துறையில் பெண்களுக்கான உரிய இடம் இன்றும் கொடுக்கப்பட வில்லை என்றே கருதவேண்டும், பெண்கள் இதுதொடர்பாக தங்களது கருத்துக்களை வலுவாக முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இன்று வரை 33 விழுக்காட்டிற்கே ஆணாதிக்க அதிகார வர்க்கத்துடன் போராடிக்கொண்டு இருக் கும் பெண்கள், ஒரு விழுக்காடு மட்டுமே தாங்கள் இடம் பெற்றுள்ள நீதித்துறைக்கு எதிராக எப்போது தங்களுக்கான பிரதிநிதித்துவம் கேட்டு போராடுவார்களோ.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner