எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஏப்.10 உத்தரப்பிரதேச மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் ’கன்யா புஜான்’ என்னும் சடங்கிற்காக சிறுமியின் கால்களைக் கழுவும் நிழற்படம் இணையத் தில் பரவி  வருகிறது.

உத்தரப்பிரதேச மாநில முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து தினமும் புதிய புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து ஊடகங் களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அரசு அலுவலகங்களில் பான் மசாலாவை மெல்லக் கூடாது, சட்டவிரோத இறைச்சிக்கூடங்கள் மூடப்படும்' என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது சில உத்தரவுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

இந்நிலையில் Ôராம நவமி’ விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது,   சிறுமிகளின் கால்களைக் கழுவினார். அந்த நிழற்படங்கள் அவ ருடைய அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றப்பட்டு, பகிரப்பட்டிருந்தன.

அரசியல் ரீதியில் மக்களின் பிரதிநிதி களாக இருப்பவர்களுக்கு பக்தி, மதப் பழக்கம் என்பதெல்லாம் தனிப்பட்ட அவருடைய விருப்பமாக இருந்தால், அதை அவர் விளம் பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர் எல்லா வகுப்பின மக்களுக் கும், எல்லா தரப்பினருக்கும் பொதுவான வராக இருந்திட வேண்டும். குறிப்பாக அரசுப் பதவிகளை வகிப்பவர்கள் அரசமைப் புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மை, ஜன நாயகம், மற்றவர்களின் உரிமைகளை மதித்து நடத்தல், குடிமக்களின் அடிப்படை உரிமை களை போற்றிப் பாதுகாத்தல் என்று செயல் பட வேண்டும்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். பாஜகவினர் தங்களின் அரசியல் ரீதியிலான பதவி, தகுதி நிலைகள் என்று எதையும் கருத்தில் கொள் ளாமல் இந்துத்துவாவை பரப்புவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை எல்லா வகைகளிலும் விளம்பரங்களுடன் செய்து வருகிறார்கள் என்பதற்கு இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம் உண்டு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner