எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 11 மைல்கற்களில் ஆங்கிலத்துக்குப் பதிலாக எழுதப்பட்ட இந்தி எழுத்துகளை நீக்கிவிட்டு மீண்டும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளது நெடுஞ்சாலைத் துறை. இந்தி எதிர்ப்பு பலமாக முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளது நெடுஞ்சாலைத் துறை.

கடந்த மாதம் நெடுஞ்சாலைத் துறை மைல்கற்களில் இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் ஊர் பெயர்களை எழுதியது. வடமாநிலத்தவர்கள் புரிந்து கொள்ளவே இந்தியில் எழுதப்பட்டதாகவும் கூறப்பட்டது.எனினும்சத்தமில்லாமல்இந்தி திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பொது மக்களால் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து சிலர் மைல்கற்களில் உள்ள இந்தி எழுத்துகளை கறுப்பு மை கொண்டு அழிக்கத் தொடங்கினர்.

சமூக வலைத்தளங்களிலும் இந்தியை திணிக் கும் முயற்சிக்குக் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேலூர் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தியை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மீண்டும் ஆங்கிலத்தை எழுதியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 77 ஆகிய தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகள் முழுவதும் உள்ள மைல் கற்களில் உள்ள இந்தியை மாற்றிவிட்டு ஆங்கிலத்தில் ஊர்ப்பெயர்களை எழுத உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் (என்.எச்ஏஅய்) கூறுகின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை தரப்பில், ‘‘தேவை இல்லாத பிரச்சினைகள் எழுவதைத் தடுக்கவே மீண்டும் ஆங்கிலத்தில் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டுள்ளன’’ என கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner