எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஏப்.11 முதல் -அமைச்சர் தேவேந்திர பட் னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்தவர், ஏக்நாத் கட்சே.

பா.ஜனதா மூத்த தலை வராகவும், அமைச்சரவையில் 2ஆ-வது இடத்தில் அங்கம் வகித்த இவர், புனே போசாரி பகுதியில் மராட்டிய தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான (எம்.அய்.டி.சி) ரூ.40 கோடி மதிப்பிலான 3 ஏக்கர் நிலத்தை தனது மனை வியின் பெயருக்கு வெறும் ரூ. மூன்றே முக்கால் கோடிக்கு முறைகேடாக மாற்றிக் கொண் டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொலைபேசியில் உரையாடி யதாகவும் அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. குறிப்பாக நில மோசடி புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதைத்தொடர்ந்து, ஏக்நாத் கட்சே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. மேலும் நில மோசடி குற்றச்சாட்டின்கீழ், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர்.

இதுபற்றி விசாரணை நடத்த விசாரணை குழு ஒன்றை முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நிய மித்தார். விசாரணை நிறை வில், 64 வயது ஏக்நாத் கட்சே குற்றமற்றவர் என்று விசா ரணை குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இதன் காரணமாக அவர் மீண்டும் அமைச்சரவையில் இணையலாம் என்று பரபரப் பாக பேசப்பட்டது. இந்த சூழலில், நில மோசடி புகார் தொடர்பாக ஏக்நாத் கட்சேக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களு டன் சமூக ஆர்வலர் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏக்நாத் கட்சேக்கு எதிராக முகாந்திரம் இருப் பதை அறிந்த நீதிபதிகள், இதுபற்றி லஞ்ச ஒழிப்பு பிரி வின் கூடுதல் டி.ஜி.பி. விசா ரணைக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, நேற்று புனே பந்த் கார்டன் காவல் நிலை யத்தில், ஏக்நாத் கட்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டது. மேலும், பாரதீய ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே, அவரது மனைவி ஆகி யோர் விரைவில் விசார ணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

நில மோசடி புகாரின்கீழ், ஏக்நாத் கட்சே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது பார தீய ஜனதா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner