எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா,ஏப்.13 மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ்-.சுக்கு எதிராக நடத்திய போராட் டத்தின்போது, Ôசாமியார் ஆதித்யநாத் ஒரு டிரம்ப் (அமெரிக்க இனவெறி அதிபர்) பார்ப்பனியம் என்பது வெள்ளையரின் ஆதிக்கம்போன்றதேÕபோன்றவாசகங் கள் அடங்கிய பலகைகளை ஏந்திப் போராடினார்கள்.

விடுதலை (ஆசாதி), ஆர்.எஸ்.எஸ்.சை முறியடிப்போம் (ஹல்லா போல்), ஆர்.எஸ்.எஸ்.சைஒழிப்போம்(ஆர்.எஸ்.எஸ்.தூர் ஹட்டோ) போன்ற முழக்கங்களை எழுப்பினார்கள்.

பங்களாதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், பவுத்தர்கள், கிறித்தவர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்களைக் கண் டித்து பன்னாட்டு கருத்தரங்கு ஆர்.எஸ்.எஸ்-. அமைப்பின் சார்பில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கலையியல் பிரிவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அய்க்கிய மாணவர் ஜனநாயக முன்னணி (யுஎஸ்டிஎப்) அமைப்பைச் சேர்ந்தவரான திபோபிரையோ சோம் என்னும் மாணவர் கூறுகையில், “பங்களாதேஷில் உள்ள சிறுபான்மையர் பிரச்சினைகள் குறித்த கருத்தரங்கை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்பாடு செய்வதைக் கண்டித்து இப் போராட்டம்நடைபெறுகின்றது.இந் தியாவில் கோத்ராவில் ஆயிரக்கணக்கான வர்கள் இறந்தார்கள், முசாபர் நகரில் சிறுபான்மையர் சந்தித்த பிரச்சினைகள் வெளிவரவில்லை. ஆகவே, ஆர்எஸ்.எஸ¢. அமைப்பினரின் செயல்பாடுகள் அய்யத்துக்கிடமானவை.- கொல்கத்தாவில் உள்ள மக்களிடையே வகுப்புவாதங்களை உருவாக்கி வெறுப்புணர்ச்சிகளை ஏற் படுத்தவே இதுபோன்ற கருத்தரங்குகளை ஆர்.எஸ்.எஸ்-. அமைப்பு நடத்த முன் வந்துள்ளது என்று நாங்கள் கருதுவதால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்பாடு செய்கின்ற இக்கருத்தரங்கை எதிர்த்து போராட்டத்தை நடத்துகிறோம்’’ என்றார்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் வளா கம் முழுவதும் காஷ்மீர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து பகுதிகளுக்கான ஆசாதி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதுபோன்ற சுவரொட்டிகளை ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் கிழித்தார்கள்.அதுமட்டுமல்லாமல்பல் கலைக்கழக வளாகத்தில் பெரும் அளவி லான தாக்குதலையும் ஏபிவிபி நடத்தியது.

ஜாதவ்பூர் மாணவர் சங்கம் என்கிற பெயரில் ரேடிகல் என்று குறிப்பிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. துணைவேந்தர் அப்சல் ஆதரவு முழக் கங்களை பேரணியில் எழுப்பியதற்கு தீவிரவாத குழுக்களே பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தாக்குதலில் தண்டிக் கப்பட்ட அப்சல் குருவை ஆதரித்தும், ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் தலைவர் கன்னய்யாகுமாரை ஆதரித்தும் ஜாதவ் பூர் மாணவர்கள் முழக்கங்களை எழுப் பினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner