எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுச்சேரி, ஏப்.13 காரைக் காலைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை போதைபொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற் படையினர் கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப் பட்டது. இதையொட்டி இலங்கை கடற்படையினரை கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் மத்திய மாநில அரசுகளை வலி யுறுத்தி மீனவர்கள் போராட் டத்தில் குதித்தனர்.

கடந்த 6ஆம் தேதி முதல் காரைக்கால் மாவட்டத்தில் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர் களும் போராட்டத்தில் பங் கேற்றனர்.

இந்தநிலையில் காரைக் கால் பகுதி மீனவர்கள் நேற்று மாலை புதுச்சேரி வந்தனர். அவர்கள் சட்டசபை வளாகத் தில் முதல்அமைச்சர் நாராயண சாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனு வில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. காரைக் கால் பகுதியை சேர்ந்த மீனவர் கள் 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்அமைச்சர் நாராயணசாமி அவர்களிடம் கூறியதாவது:

காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தெரிந்த உடன் அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். இதுதொடர்பாக மத்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அதன்பின் அவர் இலங் கையில் உள்ள தூதரகத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள் ளார். அப்போது அவர்கள், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் போதைப் பொருள் கடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்ற 5 பேரும் நிரபராதிகள் என தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். எனவே முதலில் 5 பேரையும் மீட்க நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப் பட்டவரை மீட்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக் கால் மீனவர்களை மீட்க தேவையான அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் கமலக் கண்ணன், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனி ருந்தனர். பின்னர் மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.