எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஏப்.15 புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாள் நிறைவு மற்றும் 126-ஆவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

புதுவை கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஏற்கனவே இருந்த சிலையை அகற்றி விட்டு அதற்கு பதிலாக புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அந்த சிலையை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத் தார். முன்னாள் எம்.பி. ராமதாஸ் எழுதிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

கல்வி மற்றும் பல்வேறு போட்டி களில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் நாரா யணசாமி பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் உள்ள அடித்தட்டு மக்க ளுக்காக தனது வாழ்க்கையை அர்ப் பணித்தவர் அம்பேத்கர். அவரை சாதி என்ற ஒரு வளையத்துக்குள் வைக்கக் கூடாது. அவர், தான் சார்ந்த சமுதாய வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடவில்லை. அனைத்து சமுதாய வளர்ச்சிக்கும் பாடுபட்டார்.

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல மைப்பு சட்டத்தை உலகில் 50 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. எனது அரசியல் வாழ்வில் என்னோடு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் பேர் இருந்துள்ளனர். அவர்களுக்காக நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் ஏராளமாக உள்ளன. எனது ஒரு கண் தலித் சமுதாயத்தினர், மற் றொரு கண் பிற சமுதாயத்தினர்.

அம்பேத்கரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பது போல் எந்த சமு தாயமாக இருந்தாலும் ஏழை மக்களுக்கு சேவை செய்வது எங்கள் கடமை. எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங் உள் ளிட்ட கல்லூரிகளில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்விக் கட்ட ணத்தை முழுமையாக அரசே ஏற்று இலவசமாக கல்வி அளிப்பது தொடர் பாக அமைச்சரவையில் முடிவு எடுத் தோம். இதற்காக அமைச்சரவையில் ஒரு மணிநேரம் விவாதித்தோம்.

(எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங் போன்ற தொழில் நுட்ப படிப்புகளுக்கு சென்டாக் மூலம் தேர்வாகும் அனைத்து மாணவர்களுக் கும் கட்டணத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை அரசு தற்போது செலுத்தி வருகிறது.)

இதை நிறைவேற்றுவது எங்கள் கடமை. எந்த சக்தி தடுத்தாலும் அதை நிறைவேற்றாமல் விடமாட்டோம். எங்கள் அரசு வசதிபடைத்தவர்களுக்கான அரசு அல்ல. சமுதாய வளர்ச்சிக்கான அரசு. கடந்த ஆண்டு சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவிட்டுள்ளோம்.

இடஒதுக்கீடு மசோதா

நான் மத்திய அமைச்சராக இருந்த போது, உயர் பதவிகளில் தாழ்த்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவ தற்கான மசோதாவை நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றினோம். மக் களவையில் அதை நான் தாக்கல் செய்த போது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை கொண்டே அந்த மசோ தாவை எதிர்க்கட்சியினர் பறிக்கச் செய்தனர்.

அதை அந்த எம்.பி.யிடம் இருந்து பறித்து மீண்டும் என்னை தாக்கல் செய்ய வைத்தார் சோனியாகாந்தி. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் செய்த அமளியால் அந்த மசோதா நிறைவேறா மல் போனது. ஆனால் காலம் மாறும். நாங்கள் அதை நிறைவேற்றியே தீருவோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாரா யணசாமி பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner