எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி ஏப். 16 இந்தி மொழியை நாடுமுழுவதும் கட்டாயமாக்க வேண்டுமென பிஜேபி பிரமுகர் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இம்மாத இறுதியில் விசார ணைக்கு வருகிறது.

பாஜக ஊடகப் பொறுப்பா ளரும், தலைமைச்செயலக உறுப்பினருமான, அஸ்வினி குமார் உபாத்யா டில்லி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார், அதில் நாடு முழுவதும் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும்.

இதில் 1968-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும் மொழிக்கொள்கையின் விதி களைச்சுட்டிக்காட்டி இந்தி பேசும் மக்கள் உள்ள மாநிலங் களில் இந்தி, ஆங்கிலம், மற் றும் சமஸ்கிருதம்  போன்றவை பயிற்றுவிக்கப்படவேண்டும் இந்தி பேசாத மாநிலங்களில் அவர்களது மாநில மொழி யுடன், இந்தி, ஆங்கில மொழி யையும் கற்பிக்கவேண்டும்.

இந்தி பேசாத மாநிலங் களான தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங் களின் கோரிக்கையை ஏற்றே கடந்த 1968-ஆம் ஆண்டு மும் மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை அனைத்து மாநிலங் களும் இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை. இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து வரும் உயரதிகாரிகள் மற்றும் நீதிபதி போன்ற முக்கிய பதவிகளை வகிப்பவர்கள்,இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பணி புரியும்போது இந்தியை எழுது வதற்கும், பேசுவதற்கும் சிரமப் படுகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சினைகள் எளிதில் தீர்க்கப்பட வேண்டு மெனில், அரசமைப்புச் சட்டத் தில் குறிப்பிட்டுள்ளபடி, ஒன் றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தி மொழியைக் கட்டாயப் பாட மாக்க வேண்டும். இதனால், இந்திய குடிமக்கள் அனைவ ரும் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்புகொள்ள முடியும்.

மேலும், சகோதரத்துவம், ஒற்றுமை, தேசிய ஒருமைப் பாடு ஆகியவற்றை ஊக்குவிப் பதற்காக மும்மொழிக் கொள் கையை நடைமுறைப்படுத்து மாறு மத்திய, மாநில அரசு களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு அடுத்த  விசாரணைக்கு வரும் போது இது தொடர்பாக மத்திய மாநில அரசுகளின் சார்பில் பதிலளிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த உட னேயே அப்போதைய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மத்திய அரசுப் பள்ளி களில் ஜெர்மன் மொழியை நீக்கிவிட்டு அவ்விடத்தில் சமஸ்கிருதத்தைத் திணித்தார். 2015-ஆம் ஆண்டு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை நாடு முழுவதும் கொண்டுசெல்லும் விதமாக ரயில்வே துறை மற்றும் இந்தி பேசாத மாநிலங் களில் உள்ள மத்திய அரசு அலு வலகங்களில் பணிபுரிபவர்க ளுக்கு கட்டாய இந்தி பயிற்று விப்பு மேற்கொள்ளப்பட்டது, மேலும் அலுவல் தொடர்பான மடல்களை எழுதும் போது இந்தியிலே எழுதவேண்டும் என்றும் அப்படி எழுதும் அதி காரிகளுக்கு சிறப்புச் சலுகை கள் வழங்கப்படும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

கடந்த ஆண்டும் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இந்தி மற்றும் சமஸ்கிருத வகுப்புகள் துவங்க மத்திய அரசு உதவி செய்யும் என்றும் அதற்கு விருப்பமுள்ள பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய மனிதவளத்துறை கோரிக்கை விடுத்திருந்தது, இந் நிலையில் மத்திய அரசு மறைமுகமாக தன்னுடைய கட்சி செய்தித்தொடர்பாளரை விட்டு இந்தி பேசாத மாநிலங் களில் எட்டாம் வகுப்பு வரை இந்தி  கட்டாயம் என்று மீண் டும் இந்தித் திணிப்பை மேற் கொண்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner