எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஏப். 16- கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார் பில் பெங்களூரு அம்பேத்கர் பவனில் நேற்று (15.4.2017) அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில், முதல்- அமைச்சர் சித்தராமையா கலந்துகொண்டு அம்பேத்கரின் உருவப்படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் 2017-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதை சமூக ஆர்வலர் குரு பிரசாத் கெரேகோடுவுக்கு சித்த ராமையா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் சித்தராமையா பேசியதாவது:-

டாக்டர் அம்பேத்கரின் தத் துவங்கள், கொள்கைகள் காலங்களை கடந்தும் வென்று நிற்பவை ஆகும். இந்திய அர சியலமைப்பு சட்டத்தின் சிற்பி, மனிதன் மனிதனாக வாழ கற்று தந்த தலைசிறந்த மனிதாபிமானி அம்பேத்கர். அவரது சிந்தனைகள், தத்துவங் கள், கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள், மதவாதிகளு டன் கைகோக்கமாட்டார்கள். சுயமரியாதை என்ற போர்வை யில் மதவாதிகளுடன் இணைந்து செயல்படுபவர்கள் உண்மை யான அம்பேத்கர்வாதிகளாக இருக்க முடியாது.

அம்பேத்கரின் தத்துவங் களை உண்மையாக பின்பற்று வோர், போலியான அம்பேத்கர் வாதிகளை அடையாளம் கண்டு, அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். சமூக, பொருளா தார, கல்வி ரீதியாக ஆதிதிரா விட சமுதாயம் முன்னேறினால் தான் அனைவருக்கும் சமூக நீதி கிடைக்கும் என்று அம் பேத்கர் கூறினார். இதனை நாம் புரிந்து கொண்டு போலி அம்பேத்கர்வாதிகளிடம் எச்ச ரிக்கையுடன் இருக்க வேண் டும்.

அம்பேத்கரின் தத்துவங்கள், சித்தாந்தங்களின் அடிப்படை யில் தான் எனது தலைமையி லான காங்கிரஸ் அரசு செயல் பட்டு வருகிறது. சமூக நீதியை நிலைநாட்ட எனது தலைமையிலான அரசு உழைத்து வருகி றது. எந்த ஒரு சமுதாயமும் கல்வியால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியும், சமூக நோய்களுக்கு கல்வி தான் உரிய மருந்து என்று கூறி யவர் அம்பேத்கர். அவரது பெயரில் கர்நாடகத்தில் உண்டு, உறைவிட பள்ளிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு முதல்- அமைச்சர் சித்தராமையா பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆஞ்ச னேயா கலந்து கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner