எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெய்ப்பூர், ஏப்.17 பாஜக சட்டமன்ற உறுப்பினர் விஜய் பன்சால் பள்ளி ஆண்டு விழாவில் பேசியபோது, அம் பேத்கர் அரசமைப்புச்சட்டத்தின் சிற்பி அல்ல என்று பேசியுள்ளார்.

அவர் பேச்சைக் கண்டித்தும், அவர் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவருகின்றன.

பரத்பூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் விஜய் பன்சால். பரத்பூர் கிருஷ்ணாநகர் கால னியில் உள்ள பள்ளி ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் பேசினார்.

நேற்றுமுன்தினம் (15.4.2017) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலரும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் விஜய் பன்சாலைக் கண்டித்து போராட் டத்தை நடத்தியுள்ளார்கள். கண்டனப் போராட்டத்தில் விஜய் பன்சாலைக் கண்டித்து முழக்கமிட்டார்கள். மேலும், பாஜக சட்டடமன்ற உறுப்பினர் விஜய் பன்சால் மீது சட்டப்படியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  விஜய¢ பன்சாலை சட்டமன்ற உறுப் பினர் பொறுப்பிலிருந்து சட்டமன்ற அவைத்தலைவர் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் புரான் சிங் பர்னாமி மதுரா கேட் காவல்நிலையத்தில் தாழ்த்தப் பட்டடோருக்கு எதிரான வன்கொடுமை வழக்கை பதிவு செய்யவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.

ஜாதவ் மகாசபா மாவட்டத் தலை வர் ராஜ் குமார் பப்பா கூறும்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வை விஜய் பன்சால் புண்படுத்தியுள்ளார் என்றார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் விஜய் பன்சாலின் பேச்சு ஊடகங்களின் வெளியான பதிவுகளை வழக்குரைஞர் தேவேந்திர பால்சிங் நீதிமன்றத்தில் அளித்து விஜய் பன்சால்மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மேனாள் மாவட்டத் தலைவர் ராஜேந்திரா சோனா கூறும்போது, எதிர்வரும் 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பன்சாலை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் ஒன்றிணைந்து விஜய் பன்சாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்  நரேந்திர குப்தா மூலமாக ஆளுநருக்கு மனுவை அனுப்பியுள்ளனர். மேலும் விஜய் பன்சால்மீது நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும் என்று இரண்டு நாள்கள் கெடு விதித்துள்ளனர்.

-------------

அய்.அய்.டி.களில் மாணவிகளுக்கு 20 சதவிகித கூடுதல்இடங்கள் ஒதுக்கீடு

புதுடில்லி, ஏப். 17 -நாடு முழுவதும் அய்.அய்.டி.சேர்க் கையில் மாணவிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அய்.அய்.டி மாணவர் சேர்க்கை வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளது. அதில், திமோதி கன்சால்வேஸ்கு  குழுவின் பரிந்துரையை ஏற்று மாணவர் சேர்க்கை வாரியம் மாணவி யருக்கு கூடுதலாக 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரும் 2018ஆம் ஆண்டு முதல் மாண வியரின் சேர்க்கை அதிகரிக்கும் எனவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அய்.அய்.டி.,யில் சேரும்மாணவியரின் எண் ணிக்கை குறைந்து வருவதையொட்டி அவர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல்இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner