எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குண்த் ஏப். 17 ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 5 மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 53 கிருத்தவ குடும்பத்தினரை ஆசைவார்த்தைக் கூறியும், மிரட்டியும் ஆர்எஸ்எஸ் அமைப் பினர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பச் செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் குண்த் மலை மாவட்டத்தில் சிந்திர பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் பழங்குடியினர் பெருவாரியாக வசித்துவருகின்றனர். இந்த பழங்குடியினரில் பெரும்பாலானோர் கிறித்தவ மதத் தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்துக்கள் மட்டுமே இந்தியாவில் என்ற திட்டத்தின் துவக்கக் கட்டமாக ஏழைகள் மற்றும் பழங்குடிகள் பகுதியைக் குறிவைத்துள்ளனர். முக்கியமாக பழங்குடியினர் அதிகம் வாழும் ஜார்கண்ட், சத்தீஷ்கர், ஒடிசா, போன்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் அனைத்தும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். செயலாளர் களில் ஒருவரான சயோஜக் லஷ்மண் முண்டா கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக கிறஸ்தவ மிஷனரியால் ஆசைவார்த்தைக் காட்டி தாய்மதமான இந்துமத்தில் இருந்து அவர்களை கிறித்தவர்களாக மாற வைத் துள்ளனர். இதனால் இம்மக்கள் தங்களின் அடையாளங்களை இழந்துகொண்டு வரு கின்றனர். ஆகவே இம்மக்களின் அடையா ளங்களை மீட்டு இவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு அழைத்துவர முடிவு செய்துள் ளோம்.

முக்கியமாக ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களை ஆரம்பக் கட்டத்தில் இந்துக்களின் மாநிலமாக மாற்றும் பணி களில் நாங்கள் இறங்கியுள்ளோம். இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் சுயம் சேவகர்கள் களமிறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

முதலில் ஒவ்வொரு பகுதியாக அந்நிய மதத்தவர் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். இதனால் அனைத்து கிராம மக்களும் திரும்ப வருவார்கள்" என்று கூறினார்.

குண்த் மாவட்ட பாஜக தலைவர் கூறியதாவது, கிறித்தவர்கள் எங்கள் மக்களை அவர்கள் மதத்திற்கு நயவஞ்சகமாக மாற்றிவிட்டனர். அவர்களின் இந்தச்செயலை முந் தைய அரசுகள் கண்டிக்கத் தவறி விட்டன. அந்த தவறை நாங்கள் செய்யமாட்டோம்.  இந்து மதத்திற்கு திரும்பும் இயக்கத்தை இந்து அமைப்புகளின் உதவியோடு செயல் படுத்தி வருகிறோம்." என்று கூறினார்.

யாகத் தீர்த்தம் தெளிப்பு

இந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி 53 மலை வாழ் கிறித்தவ குடும்பத்தினர் கோச் சாசிந்திரி கிராமத்தில் நடந்த புனிதப்படும் நிகழ்ச்சிக்கு வலுக்கட்டயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஈஸ்டர் திருநாளுக்காக தயாராகிக்கொண்டு இருந்த அவர்களை சில இந்து அமைப்பினர் அரசு உதவி மற்றும் சலுகைகள் வழங்குவதாக கூறி கோச்சாசிந்திரி என்ற கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு உள்ளூர் மடத்தலைவர் அனைவரையும் யாகம் ஒன்றில் கலந்துகொள்ளச்செய்து அவர்கள் மீது யாகத்தீர்த்தம் தெளிக்கப்பட்ட பிறகு அனைவரும் இனி இந்துக்களாகி விட்டீர்கள் என்று அறிவிப்பு செய்தார். உத விகள் தருவதாக அழைத்துவந்து தண்ணீரைத் தெளித்து மதம் மாற்றிவிட்டீர்கள் என்று கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர் என்று ஏமாந்த கிராம மக்கள் கூறினர்.

மிரட்டும் அரசு

ஜார்கண்டின் மொத்த மக்கள் தொகையான 33 மில்லியனில் மலைவாழ் மக்கள் 26.2 சதவீதம் பேர் உள்ளனர். இதில் 4.5 சதவீதம் பேர் கிறித்தவர்கள். வலுக்கட்டாயமாக மதம் மாற்றுபவர்களுக்கு ஆளுங்கட்சியின் முதல்வர் ரகுபர் தாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வீடு வீடாக சென்று

வனவாசி கல்யாண் கேந்திர என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடி மக்கள் பிரிவு ஆர்.எஸ்.எஸ்., பணியாளர்களுடன் வீடுவீடாக சென்று மலை வாழ் மக்களை மதம் திரும்பச் சொல்லி மிரட்டுகின்றனர். அதோடு பொதுக் கூட்டங்களையும் நடத்தி இனி இந்து ராஜ்யம் தான்! ஆகையால் கிறித் தவர்களாக இருந்தால் எந்த ஒரு சலுகையும் கிடைக்காது என்று பகிரங்கமாக மிரட்டி வருகின்றனர்.

இது குறித்து மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் கூறப்படுவதாது, "நாங்கள் மாநிலம் முழுவதும் சென்று தாய் மதத்தில் இணைவதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறுகிறோம். எங்களின் பேச்சின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தாய்மதம் திரும்பவேண்டும் திரும்புவார்கள் என்று கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து மலைவாழ் மக்களின் இயக்கமான சர்னா தர்ம(சமதர்ம சிந்தனை) அமைப்பைச் சேர்ந்த பந்தன் டிகா என்பவர் கூறும் போது: "சர்னா மலைவாழ் மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறிவிட்டால் இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று ஆர்எஸ்எஸ் கவலைப்படுகிறது, மத மாற்றம் குறித்து முதல்வர் பொது இடங்களில் அரசமைப்புச் சட்டவிதிகளையும் மீறி பேசி யதைத் தொடர்ந்தே இந்து மதம் திரும்பும் இயக்கம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. முதல்வர் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு சாதக மாக நடந்து கொள்கிறார். என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சர்னா மலைவாழ் மக்கள் இயற் கையை தாயாக வணங்க விரும்புகின்றனர். அவர்கள் இந்து, முஸ்லிம், கிறித்தவம் என்று எந்த மதத்தையும் சாராமல் தனியாக இருக்க விரும்புகின்றனர் என்று சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. தங்களை தனி மதமாக அங்கீகரிக்க கோரி மலைவாழ் மக்கள் அரசுக்கு மனு அளித்துள்ளனர். இது போன்ற எங்கள் மக்களை இந்து அமைப்பி னரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்யக் கூடாது என்று பந்தன் டிகா கூறினார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner