எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஏப். 20 தலைநகர் டில்லியில் நாளை மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற விருக்கும் போது கனடா நாட்டு சாலை ஒன்றின் படத்தை தாங்கள் அதிகாரத்தில் உள்ள முனிபாசிலிடி பகுதியில் உள்ள சாலையின் படமாக காண்பித்து டில்லியில் விளம்பரம் செய்யும் பாஜகவினரின் ஏமாற்று வேலையை சமூகவலை தளத்தினர் மீண்டும் அம்பலமாக்கினர்.

டில்லி பாஜக தனது விளம்பரத்திற்காக பயன்படுத்திய படம், கருத்து பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாளை டில்லி மாநகராட்சித் தேர்தல்  நடைபெறவுள்ளது. தெற்கு டில்லி மாநகராட்சி தற்போது பாஜக வசம் உள்ளது.  அதை தக்கவைத்துக் கொள்ள துடிக்கும் பாஜக, தாங்கள் நிர்வாகிக்கும் நகரங்களை எப்படி வைத்திருக்கிறோம் பாருங்கள் என பளபளப்பான, கண்ணாடி போல பளிச்சென்று இருப்பதுபோன்று தெருவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதை விளம்பரமாகவும் செய்திருந்தது.

இந்தப்போட்டோவுக்குக் கீழே,   2 லட்சம் தெருவிளக்குகள் எல்இடிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் தெற்குடில்லி நிர்வாகத்திற்கு கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ.425 கோடி சேமிப்பாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் பாஜகவினர் வெளியிட்ட இந்த படத்தைப் பார்த்து குழப்பம் அடைந்தனர்.

ஏனென்றால் அந்தத் தெரு கனடா நாட்டில்  ரிச்மண்ட் நகரில் இருக்கும் ஒரு தெருவாகும்.  இது உண்மையா? என அதிகாரிகளிடம் போட்டோவுடன் விளக்கம் கேட்ட நெட்டிசன்களுக்கு இதுவரை பதிலில்லை என்கிறார்கள்.

இதெல்லாம் பாஜக வினருக்கு சகஜமானதுதான் என்று தெரி வித்த நெட்டிசன்கள், உதாரணத்துக்கு நான்கை மட்டும் சொன் னார்கள்.  கடந்த உத்தரப்பிரதேச தேர்தலின் போது பிரதமர் மோடி கலந்துகொண்ட வாரணாசி பிரச்சாரக்கூட்டத்தை கட் அண்ட் பேஸ்ட் முறையில் மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டியிருந்ததை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினர்.

அதுமட்டுமல்ல, கடந்த 2015  ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னையில், வெள்ளத்தில் மக்கள் சிக்கியிருப்பதை மோடி  பார்வையிடுவது போல் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டதாக மத்திய பத்திரிகை தகவல் துறை மீது குற்றச்சாட்டு இருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர். .

இதேபோல் பிரதமர் மோடி காக்கி உடையில் தெருவை சுத்தம் செய்வதும் கிராபிக்ஸ்தான் என்றும் நிரூபித்தனர். இதேபோல்  இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க வீரர்கள் அந்நாட்டுக் கொடியை நிமிர்த்துவது போன்ற போட்டோ  புகழ் பெற்றது.

அதை கிராபிக்ஸ் மூலம் அமெரிக்க கொடிக்குப் பதிலாக இந்தியாவின் கொடியை மாற்றியது தொலைக்காட்சி ஒன்றில் விவாதப் பொருளானது. அப்போது அந்தக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித்பாத்ரா பதில் சொல்ல முடியாமல் மழுப்பியது போன்ற ஏராளமான நிகழ்வுகளை நடுநிலையாளர்கள் அடுக்குகின்றனர். இருப்பினும் பாஜக  குறுக்குவழியில் ஆதாயம் தேடத்தான் தொடர்ந்து முயற்சிக்கிறது என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner