எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஏப்.22 இந்திய அளவில் பிராந்திய கட்சிகளில், மிகவும் முக்கியமான தலைவ ராக தற்போது மம்தா  திகழ்ந்து வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு அஞ்சாமல் துணிச்சலாக செயல்படும் ஒரே தலைவராக மம்தா  உள்ளார். கம்யூனிஸ்டுகளின் கோட்டை யாக இருந்த மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை அதிரடி யாக கொண்டு வந்தவர். இந் நிலையில், அனைந்திந்திய திரி ணாமூல் காங்கிரஸ் கட்சி தலை வராக முதலமைச்சர் மம்தா  மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள் ளார். கொல்கத் தாவில் உள்ள நேதாஜி உள் விளை யாட்டரங்கத்தில் திரிணா மூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்புகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமார் 10 ஆயிரத்தும் மேற்பட்ட திரிணா மூல் கட்சியினர் மைதானத்தில் கூடினர்.
தேர்வுக்கு பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய மம்தா, தலைவர் பொறுப்பு வேறு யாரி டமாவது கொடுக்கப்பட்டிருந் தால், சிறப்பானதாக இருந்திருக் கும். எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன. கட்சியின் தொண்டராக இருக்கவே விரும் புகிறேன். ஏனெனில் தொண் டர்கள் தான் கட்சியின் சொத்து. தலைவர்கள் அல்ல என்றார்.

1998-ம் ஆண்டு முதல் திரி ணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மம்தா  4-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. முன்னதாக கடந்த நவம் பர் 2011ஆ-ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் தேர்தலில் தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டார். தற்போ தும் 6 ஆண்டுகளுக்கு அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டி ருக்கிறார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner