எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு

மும்பை, ஏப்.23 நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும் என்று பீகார் முதல்- அமைச்சர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்தார்.

அய்க்கிய ஜனதா தள கட்சியின் மராட்டிய மாநில பிரிவை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் நேற்று மும் பையில் தொடங்கி வைத்தார். அத்துடன் அக்கட்சியின் மாநில தலைவராக கபில் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.

மராட்டிய மேல்-சபை உறுப்பினரான கபில் பாட்டீல், தன்னுடைய லோக் பார்தி கட்சியை அய்க்கிய ஜனநாயக தள கட்சியுடன் இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, நிதிஷ் குமார் பேசுகையில் கூறிய தாவது:-

நாடு முழுவதும் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்தால், எதிர்மறை அரசியலை தோற் கடித்து விடலாம். வேறு பாடுகளை களைந்து, ஒருமைப் பாட்டை நிலைநாட்டினால் எவ்வாறு வெற்றி அடையலாம் என்பதற்கு பீகார் சிறந்த உதா ரணம். சமூக நல்லிணக்கமும், உள்ளார்ந்த வளர்ச்சியும் தான் எங்களது இலக்கு.

நமது நாட்டின் அழகே அதன் பன்முகதன்மை தான். எதிர்மறை காரணிகள் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவது தற்காலிகமானது. மூவர்ண கொடி மீது எந்தவொரு பற்றும் இல்லாதவர்கள், தேசிய கொடி யின் பெருமை பற்றி பேசு கிறார்கள். பிறரது தேசப்பற்று பற்றி சவால் விட யாருக்கும் உரிமை கிடையாது.

2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பாரதிய ஜனதா ஆட்சி பொறுப் பேற்றால், விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி செலவில் குறைந்தது 50 சதவீதத்துக்கு நிகராக லாபம் கிடைப்பதை உறுதிசெய்வோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தினால், வேளாண் நெருக்கடி கட்டுப் படுத்தப்பட்டிருக்கும்.
இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

மராட்டியத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு பீகார் நிறுவன நாள் கொண்டாடப்பட்டதற்கு ராஜ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனை நினைவு கூர்ந்த நிதிஷ் குமார், ராஜ் தாக் கரேயை மறைமுகமாக சாடி னார்.

இதுபற்றி அவர் குறிப்பிடு கையில், அன்றைக்கு பீகார் நிறுவன தினத்தை எதிர்த்த வர்கள், இப்போது அடங்கி விட்டார்கள். பீகார் மக்கள் இல்லாமல், நாட்டில் யாரும் எந்த வேலையும் செய்ய முடி யாது. பீகார் மக்கள் மற்றவர் களை சார்ந்தும் இல்லை, மற்றவர்களுக்கு பாரமாகவும் இல்லை என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner