எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்தராபாத், ஏப்.25 இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) செலுத்தும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை ஆண் டுக்கு 12 என்ற அளவில் அதிக ரிக்கப்படும் என்று அதன் தலை வர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்தார்.

அய்தராபாதில் செய்தியாளர் களிடம் நேற்று (23.4.2017) பேசிய அவர் இது தொடர்பாகக் கூறிய தாவது:

தொடக்கத்தில் நாம் ஆண் டுக்கு 2 முதல் 3 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வந்தோம். பின்னர் அது 4 முதல் 5 செயற் கைக்கோள்களாக அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளாக நாம் சராசரியாக ஆண்டுக்கு 7 செயற் கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாகச் செலுத்தி வரு கிறோம்.

இப்போது 8 முதல் 9 பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் களை செலுத்த முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. எதிர் காலத்தில் ஆண்டுக்கு 12 ராக் கெட்டுகளைச் செலுத்தும் வகை யில் இஸ்ரோவின் திறன் அதிக ரிக்கும். இப்போது அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் இஸ்ரோ பயன்படுத்துகிறது. எனவே, செயற்கைக்கோள்களை தயாரிப்பது, ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான செலவு குறைந்துள்ளதுடன், அவற்றின் செயல்பாட்டுத் திறனும் மேம் பட்டுள்ளது. இதனால், இஸ் ரோவால் அதிக செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்த முடியும்.

விண்வெளியில் ஆய்வு மய்யம் அமைக்கும் திட்டத்துக் கும் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த ஆண்டில் சந்திரயான்-2 திட்டத்தை இஸ்ரோ தொடங்க இருக்கிறது. இது முழுவதும் இந்திய தொழில் நுட்பத்தில் அமையும் திட்டமாக இருக்கும்; ரஷ்யாவின் பங்களிப்பு இருக்காது. விண்ணுக்கு பல முறை சென்றுவரக் கூடிய விண் வெளி ஓடத்தை தயாரிக்கும் திட்டமும் இஸ்ரோவிடம் உள் ளது. இது தொடர்பாக இப்போது பல்வேறு ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இது இந்திய விண் வெளித் துறையில் முக்கியமான சாதனையாக அமை யும் என்றார் அவர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner