எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்

10 லட்சம் விவசாயிகளைத் திரட்டி  பிரதமர் அலுவலகம்முன்பு முற்றுகைப் போராட்டம்

இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு

திருச்சி, ஏப்.27 விவசாயிகள் கடன்களை ரத்து செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் 41 நாள்களாக நடத்தி வந்த போராட் டத்தை ஒத்தி வைத்துவிட்டு  தமிழகம் திரும்பினர்.

திருச்சியில் நேற்று (26.4.2017), அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டில்லியில் நடந்த போராட்டத்தின் போது தமிழக முதல்வர், மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்தப்படி விவசாயிகளின் கோரிக்கைகள் நிறை வேற்றாவிட்டால் பெரிய அளவில் விவசாயிகளை திரட்டி டில்லி ஜந்தர் மந்தரில் மே 25 ஆம் தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

முன்னதாக டில்லி ஜந்தர் மந்தரில் வரும் மே 15 முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஆலோ சனைக் கூட்டம் நடக்க உள்ளது.

இக்கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து 20 மாநிலங்களில் இருந்து சுமார் 10 லட்சம் விவசாயிகளை ஒன்று திரட்டி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner