எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிச் சீருடை, மொட்டைத்தலை தான்

இனி உ.பி. பள்ளி மாணவர்களின் அடையாளமாம்!

இந்து அமைப்புகளின் மிரட்டல் - தனியார் பள்ளிகள் புதிய நடவடிக்கை!

காசிப்பூர் (உபி) ஏப். 28 உத்தரப்பிர தேசத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு காவி வண்ண சீருடை மற்றும் உத் தரப்பிரதேச முதல்வரைப்போல் சிகை அலங்காரம் (மொட்டை) செய்திருக்கவேண்டும் என சில இந்துஅமைப்புகள்மிரட்டல்விடுத் திருந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி கள் ஆரம்பிக்கும் போது மாணவர்கள் காவி உடை மற்றும் மொட்டைத் தலையுடன் வரவேண்டும் என்று புதிய உத்தரவுகளை தனியார் பள்ளி கள் பிறப்பித்துள்ளன.

உத்தரப்பிரதேசத்தில்பாஜக வெற்றி பெற்று சாமியார் ஆதித்ய நாத் தலைமையில் ஆட்சி அமைந் தது முதலே அங்கு இந்துத்துவ அமைப்புகளின் அராஜகம் அதி கரித்து வருகிறது, காவல்துறை வாகனங்களில் சாமியாரின் யுவ வாகினி அமைப்பினர் வலம் வரு வது, இந்து அமைப்பினரைக் கைது செய்தால்காவல்நிலையத்தைசூறை யாடுவது போன்ற பல்வேறு சட்டத் திற்குப் புறம்பான செயல்களைச் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிகளுக்கும் காவி அமைப்பினர் மிரட்டல் விடுக்க ஆரம்பித்து விட்டனர். மீரட் நகரைச் சேர்ந்த சில பள்ளிகளுக்கு இந்துஅமைப்புகள்மிரட்டல்விடுத்த தன் எதிரொலியாக அங்கு காவி வண் ணத்தில் சீருடை மற்றும் மொட்டைத் தலையுடன் தான் வரும் கல்வியாண்டிலிருந்து பள்ளி மாணவர்கள் வர வேண்டும் என்றுபள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்குகூறியுள்ளது.

மீரட்டில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை 2,800 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள் ளிக்கூடம் விடுத்த அறிக்கையில் இனி, முதல்வரைப் போல்  முடி வெட்டி மெல்லிய சிவப்பு வண் ணத்தில் (காவி) சீருடை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என உத்தர விட்டுள்ளது.

அதேபோல் அசைவ வகை உணவுகளும் இனி பள்ளிகளுக்கு கொண்டுவரக்கூடாது என்று மறை முகமாக தனியார் பள்ளிகள் உத்தரவு களைப் பிறப்பித்து வருகின்றனர்.  உத்தரப்பிரதேசத்தில்தற்போதுபஜ்ரங் தள், விசுவ இந்து பரிஷத், யுவ வாகினி போன்ற அமைப்புகள் சட் டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு அனைத்து விவகாரங்களிலும் தலை யிட்டு வருகின்றன.

சிறுபான்மையினர்நடத்தும் பள்ளிகளில் சரசுவதி வந்தனம் பாட வேண்டும்,இல்லையென்றால் உரிமம்ரத்துசெய்யப்படும் என்று ஆக்ராவைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கு இந்து அமைப்பின் பெயரில் மொட் டைக் கடிதம் வந்தது. இந்த விவகாரம் தீர்வதற்குள் தற்போது சீருடை, சிகை அலங்காரம் போன்றவற்றில் நேரடியாகவேபள்ளிகளுக்குமிரட் டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner